பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

புரிந்தான். அவளை விடுவித்து விட்டு, “நீயும் உன் பூனைக் குட்டியும், ஆளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டீர்களே!” என்று அவன் சிரித்தான்.

“ஐயோ, கேலிபண்ணாதே!” என்று கூவிக் கொண்டே யாஸ்மி ஒடி ஒளிந்து விட்டாள். அன்று மாலை நேரம் முழுவதும், தன்னைப் பரிவுடன் பிடித்த அந்தக் கையையும் புன்சிரிப்புடன் தன்னைப் பார்த்த அந்தக் கரிய விழிகளையுமே நினைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று முதல் யாஸ்மிக்கு, இப்ராஹீம் மகனைத் தவிர வேறு நினைவேயில்லை! எப்பொழுதும் வீதியிலே பூங்காவனத்தை நோக்கிப் போகும் பிரயாணிகளைப் பார்த்தபடி உட்காரும் அவள், அன்று முதல் பள்ளிக்கூட வாசல் தன் கண்ணுக்குத் தெரியும்படியாகப் புத்தகக் கடையின் முன்பக்கத்திலே வந்து உட்கார்ந்து கொண்டான். எப்பொழுது பள்ளிக் கூடம் விட்டுக் கதவு திறப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பாள். விரைந்து நடந்து வரும் பையன்களின் மத்தியிலே, இப்ரஹீமின் மகனின் அந்த அலங்கோலமான உருவம் வந்தவுடனே அவள் உள்ளம் துள்ளிக் குதிக்கும் கன்னஞ் சிவக்கும். நாணத்துடன் திரும்பிக் கொள்வாள். பிறகு கடைக்கண்ணால் திரும்பிப் பார்ப்பாள். நிமிர்ந்து நிற்கும் அந்தக் குறும்புக்காரனுடைய தோற்றத்தையும், உறுதியாகக் கால் வைத்து நடக்கும் அவனுடைய நடையழகையும் வியப்புடன் அவள் பார்த்துக் கொண்டேயிருப்பாள். அவனுடைய கரிய உதடுகளும் கண்களும் அவளைக் கண்டதும் விரியும். அவன் அவளைப் பார்த்துப் புன்சிரிப்புக் காட்டும்போது, அவனுடைய கடுகடுப்பான முகத்திலும் ஒருவித மென்மையுண்டாவதை யாஸ்மி கண்டு உள்ளம் பூரிப்பாள். அவன் கவனத்தைத் தன்னிடத்தில் திருப்புவதற்காக அவள் என்னென்னவெல்லாமோ செய்தாள். அழகான ஆடைகளை அணிந்துகொண்டாள். கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கும் புருவத்துக்கும் மைதீட்டிக் கொண்டாள். கடையிருகில் அவன் வரும்போது தன் கையிலுள்ள ரோஜாப் பூவை நழுவவிட்டுப் பார்த்தாள். தனக்குத் தெரிந்த பெண்மணிகள் இதற்கு முன்னே, தங்கள் காதலர் கவனத்தைத்