பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

என்று கருதும் நிலையில் உள்ள ஒரு மாணவனோடு பேசிக்கொண்டிருப்பதால், உன் உள்ளம் அமைதியில்லாமல் இருக்கிறது. அல்லவா? நான் யார் என்றால் சாபா என்பவரின் மகன் ஹாஸான்” என்று அவன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.

ஆம்! இந்த ஆட்டக்காரன் இறந்தபொழுது நான் ஒரு குறி கண்டேன். இப்பொழுது இதே நொடியில் நான் ஒரு பெரிய மனிதனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அந்த மனிதனுக்கு எதிரில் இருப்பவனின் எண்ணத்தை அறியும் ஆற்றல் உண்டு. அந்த மனிதன் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கிறான். அல்லா, உமார் மட்டும் எனக்கு நண்பராகி விட்டால்? ஏன்? அவன் என் நண்பனாகத்தான் வேண்டும். அப்படித்தான் விதி எழுதப்பட்டிருக்கிறது. சரி நேரமாகிவிட்டது. விண்மீன்கள் மறைந்து கொண்டிருக்கின்றன. நான் போகிறேன்” என்று ஹசன் புறப்பட்டுவிட்டான்.

அவன் பேசிக்கொண்டிருந்தபொழுது திடீரென்று அந்த வெளிச்சம் மறைந்து விட்டது. ஹாசான் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. எப்படி ஒரு துறவிக்கு மதுக்கடையைப் பற்றித் தெளிவாகத் தெரியுமோ? அதுபோல், இந்த குட்டிச் சுவர்களுக்கூடேயுள்ள வழிமுழுவதும் எனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறிக் கொண்டே, உமாரின் கையைப் பிடித்துக் கொண்டு, அந்தக் குறுகிய பாதை வழியே நடக்கத் தொடங்கினான். மேட்டினின்றும் அடியில் வரும் போதெல்லாம், எதிரில் எதையும் காண முடிவதில்லை. இருப்பினும் ஹாசான், தன் நடை வேகத்தைக் குறைக்கவில்லை. விடுவிடுவென்று நடந்து சென்று கொண்டிருந்தான். அவர்களுக்குப் பின்னால், பெரிய இறக்கைகள் படபடக்கும் ஓசை கேட்டது. அந்தக் கழுகும் அவர்களைத் தொடர்ந்து வருவதுபோல் இருந்தது. பிறகு விடைபெற்றுக் கொள்ளாமலும் ஒன்றும் பேசாமலும், உமாரின் கையை விட்டுவிட்டு ஹாஸான் இருட்டுக்குள்ளே மறைந்து போனான். அந்தக் கழுகு பறக்கும் ஓசையும் படிப்படியாக ஒலி குறைந்து ஒரேயடியாக மறைந்துவிட்டது.

உமார், தன்னுடைய கூடாரத்தில் எரியும் விளக்கின் அருகில் தனக்காகக் காத்திருந்து விழித்தபடியே முடங்கிக் கிடந்த அடிமைகளைக் கண்டான். தான் துங்குவதற்கு முன்னால்