பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

பற்றி அவை கூறின. இவ்வாறாக, மாலிக்ஷாவின் படைகள் புனித ஸ்தலமான ஜெருசலத்தைக் கைப்பற்ற வேண்டியது எவ்வளவு இன்றியமையாதது என்பதை உமார் உணர்ந்து கொண்டான்.

கோடிக்கணக்கான மத நம்பிக்கையுள்ளவர்களால், இஸ்லாத்தின் தலைவராகவும், பாக்தாது தேசத்தின் காலிப்பாகவும் கருதப்படும் அளவுக்கு மாலிக்ஷா மதிப்புடையவராகி விட்டார். ஏற்கெனவே மெக்கா மெதினா என்ற இரு புண்ணிய ஸ்தலங்களையும் துருக்கியர்கள் கைப் பற்றியாகி விட்டது. முறை கெட்ட அரசு செய்யும் கெய்ரோவின் காலிப் கையிலிருந்து மூன்றாவது புண்ணிய ஸ்தலமான ஜெருசலத்தையும் கைப்பற்றி மாலிக்ஷா அவர்களின் பெரிய சாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட வேண்டியது மிக முக்கியமானது.

இதன் காரணமாகவே, மாலிக்ஷா அவர்கள் வடக்கேயுள்ள மதவிரோத்திகளான பைசாந்தியர்களை எதிர்த்தும் தம் படைகளைச் செலுத்த வேண்டியிருந்தது. புனிதமான இந்தப் போராட்டத்திலே இஸ்லாத்தின் மாபெரும் தலைவரான சுல்தான் அவர்கள் ஈடுபடும் வரையில், அவருடைய கொடியின் கீழ் படை திரண்டு கொண்டேயிருக்குமே தவிரக் குறையாது. சமவெளிப் பிரதேசங்களிலிருந்து, புதிது புதிதாகத் துருக்கிப் போர் வீரர்கள் வந்து கொண்டேயிருந்தனர். படையில் சேருவதற்காக மேற்கு நோக்கி மீண்டும் மீண்டும் நிசாம் வீரர்களை அனுப்பிக் கொண்டேயிருந்தார்.

உருவமில்லாத கம்பளி மயிர்களின் குவியல்களைச் சேர்த்து நூலாக்கித் தறியின் முன்னேயிருந்து கொண்டு துணிகளை நய்யும் நெசவாளியைப் போல், நிசாம் அவர்கள், இருந்த இடத்தில் இருந்து கொண்டே, இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பெரும் பணியில் ஈடுபட்டிருப்பதை உமார் மிக மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டான்.

“ஜெருசலத்தில் படையெடுக்கலாமா? நல்ல காலம்தானா?” என்று மாலிக்ஷா அவர்கள் கேட்டபொழுது, ‘ஆகா! இந்த மாதம் மிகப் பொருத்தமாக இருக்கிறது. தங்கள் கிரகத்தின் அருகிலேயே செவ்வாயும் வந்து நெருங்கியிருப்பதால், உடனே படையெடுக்க வேண்டியதுதான்” என்று சோதிடம் சொன்னான் உமார்.