பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

அலைக்கழித்துக் கொண்டு திரிந்தான். சிப்பித் தூண்கள் நிறைந்த கடற்கரை ஓரத்தில், மணல் வெளியில் வீசும் காற்றின் ஊடே அலைந்து கொண்டிருந்தான்.

கிரேக்கர்களும், ரோமானியர்களும் தங்கள் மரக்கலங்களிலே வந்திறங்கித் துறை முகங்களும் பளிங்குக் கட்டிடங்களும் அமைந்த பெருங்கடலின் கரையிதுதான். இப்பொழுது அந்தக் கட்டிடங்களெல்லாம் பாழடைந்து கிடந்தன. ஆழ்கடலின் நெடுந்துரம் வரையிலே சிறந்து விளங்கிய டைர் நகரமும், கடலின் அடித்தளத்திலே, தன் அஸ்திவாரமும் அமிழ்ந்து போய் விளங்கும் சீடான் நகரமும் இருந்த இடம் சிறந்து விளங்கிய பிரதேசம் இதுதான். அபூர்வமான கிருஸ்தவ ஞானிகள் வாழ்ந்து மறைந்த இடமான கார்மல் குன்றின்மேலேயும் உமார் ஏறித்திரிந்தான். பிறகு உள்நாட்டு பிரதேசமான ஆழ்ந்து கிடந்த காலிலீ ஏரிப் பிரதேசத்துச் சரிவிலே இறங்கினான்.

பூமாதேவியின் அடிவயிறுபோல் விளங்கிய இந்தப் பள்ளத்தாக்குப் பிரதேசத்திலும், அதன் கந்தகக்குழம்பு ஊற்றுக்களிலும், மறக்கப்பட்டு மறைந்துபோன அரண்மனைகளின் விசித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கற்பதிப்புக்கல்களிலும் அங்கு வாழ்ந்த பரிதாபத்திற்குரிய, தாடி வளர்ந்த பெரிய மனிதர்களான யூதர்களின் வாழ்க்கை நிலையிலும் தங்கள் கவனத்தைச் செலுத்திய உமாரின் கூடவந்த காத்தாயனிய வீரர்களுக்கு இந்தப் பிரதேசங்களில் பேய்கள் குடிகொண்டது போலத் தோன்றியது. அந்தப் பகுதியிலே அப்படிப்பட்ட சுடு காட்டுத் தன்மை நிலவியது.

ஆனால், ஜெருசலத்தை நோக்கித் தங்கள் வழியைத் திருப்பிக் கொண்ட பிறகு, அவர்கள் தங்களுக்குப் பழக்கமான ஒரு சூழ்நிலையைக் கண்டார்கள். சுல்தானுடைய படைகள் ஜெருசலத்தைக் கைப்பற்றிய பிறகு நாட்டுப் புறத்திலே இருந்த மத விரோதிகளான எதிரிகளின் சொத்துக்களையெல்லாம் கொள்ளையடித்தனர். தானியங்கள் நிறைந்த வயல்களின் வழியாக குதிரைகளைச் செலுத்தி அவ்வயல்களின் விளைவுகளை அழித்துக்கொண்டும், பாதிரி மடங்களைச் சோதனையிட்டுப் பொருள்களை அள்ளிக்கொண்டும் சென்றார்கள். தலைப்பாகையணியாத மனிதர்களும், இடுப்பில்