பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

புதைத்துக் கொண்டு இருக்கும் ஏழை மக்களை காணும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஹாஸானின் உணர்ச்சிகரமான பேச்சு உமாரின் உள்ளத்தைக் கலக்கியது.

“மக்களின் மனத்திலே மூன்று கடவுள்கள் பதிந்திருக்கின்றன என்பதைத்தான் நாம் அறிவோமே! யூதர்களின் யஹோலா ஒரு கடவுள்; கிறிஸ்தவர்களின் ஆண்டவர் ஒரு கடவுள்; குர் ஆன் கூறும் அல்லா ஒரு கடவுள்; என்றான் ஹாசானின் கூட வந்த அந்த மனிதன்.

“நன்றாகச் சிந்தித்துப் பார். மூன்று முறையும் நீ என்ன கூறினாய்? ஒரு கடவுள் என்ற சொல்லைத்தானே மூன்று முறையும் கூறினாய். இந்தக் கிறிஸ்தவர்களும், யூதர்களும், இஸ்லாமியர்களும் எல்லோரும் உண்மையைக் கொஞ்சம் உள்ளத்தால் ஆராய்ந்து பார்த்தால் என்ன? அல்லா என்று சொல்வதைக் காட்டிலும் “ஒரு கடவுள்” என்ற கொள்கையை ஏன் பெரிதாகக் கொள்ளக் கூடாது?” பேசிக்கொண்டே வந்த ஹாசான், திடீரென்று நிறுத்திக் கொண்டான்.

அவர்கள் இருவரையும் தன்னைத் தொடரும்படி கண் காட்டினான். புனிதமான பள்ளியைநோக்கி கூட்டிச் சென்ற அவன் அதற்குச் செல்லாமல் கிழக்குப் புறத்தில் திறந்திருந்த கோட்டை வாசல் வழியாக அழைத்துச் சென்றான். முஸ்லீம்களின் இடுகாட்டுப் புதை குழிகளின் ஊடாகச் சென்றார்கள். அந்த இடுகாடு நகரக் கோட்டைச் சுவர் வரையிலே பரந்து கிடந்தது.

அவர்கள் சென்ற பாதை வரண்டு கிடந்த ஓர் ஓடைப் படுகை வழியாகச் சென்றது. களிமண்ணும், கூழாங்கற்களும் நிறைந்து கிடந்த அந்தக் குறுகிய பாதை வழியாக, கரிய நிறமுடைய வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் ஒட்டிக்கொண்டு சில வேடுவர்கள் குதிரை மீது சென்றார்கள். உமாருக்கு அந்த ஆட்டு மந்தையின் இடையே புகுந்து நடப்பதற்கு ஆசையாயிருந்தது. அவன் ஆடுகளின் நடுவே நடக்க முயல்வதைக் கண்ட, காத்தயானிய வீரர்கள் இருவரும், விரைந்து அந்த ஆடுகளை விலக்கி நடுவிலே ஒரு பாதை ஏற்படுத்திக் கொண்டு சென்றார்கள். போர் வீரர்களின் உடையைக் கண்டதும் அந்த வேடர்களும், விரைந்து, ஆடுகளை விலக்கி உதவினார்கள்.