பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165

“அவர் குடித்திருப்பது போன்ற மதுவை உன் ஆயுள் முழுவதுமே குடிக்க முடியாது. பேசாமல் வா!” என்று அதட்டினான் அந்த விகடன்.

அங்காடிச் சந்தையின் தெருவாசல் அருகிலே, இராவிளக் கொன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலே ஈட்டி தாங்கிய வீரர்கள் அறுவரும், காவல் தலைவன் ஒருவனும் காவல் செய்து கொண்டிருந்தார்கள். காவல் தலைவன், பல்லக்கையும், பல்லக்குடன் வரும் அரசாங்க உடுப்பணிந்த பாதுகாப்பு வீரர் இருவரையும், பக்கத்திலே வரும் உமாரையும் கண்டான். உமாரின் தோற்றத்தைக் கண்டதும் ஏற்பட்ட ஒரு மரியாதையுணர்ச்சியால் எதிரில் சடக்கென்று நின்று சலாம் வைத்தான்.

“தலைவரே! பேரரசர் சுல்தான் அவர்களின் ஆணைப்படி இந்தக் கதவுகள் இரவு நேரங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இதைத் திறப்பதோ, கடப்பதோ இயலாத செயல்” என்று பணிவாகவும், சட்டத்தின் பிடிப்பை விட்டுக் கொடுக்காமலும் அந்தக் காவல் தலைவன் கூறினான்.

“சுல்தான் அவர்களின் அன்பைப் பெற்ற எனக்கு இன்றிரவு எதுவுமே அடைக்கப்படக் கூடாது. நீ இதைத் திறப்பதற்கு அனுமதிப்பதன் அடையாளமாக இந்த மோதிரத்தை வைத்துக் கொள். சீக்கிரம் கதவுகளைத் திற!” என்று கட்டளையிட்டான் உமார்.

“ஆஸ்தான சோதிடரை இவ்வளவு நேரமா காக்க வைப்பது? திற திற!” என்று உறுமினான் ஜபாரக்.

காவல் தலைவன், மோதிரத்தைப் பெற்றுக் கொண்டு சந்தேகம் கலந்த பார்வையுடன் தலையை அசைத்தான். வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே வாசலின் இரட்டைக் கதவுகளில் ஒன்றைத் திறந்து விட்டான். தன்னுடைய வீரர்களை விலகி விடும்படி கூறினான். உமாரும், பல்லக்கும் உள்ளே நுழைந்தனர். பல்லக்குக்குப் பின்னாடியே ஒரு தாடிக்காரக் கிழவன் ஒட்டிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டான். வீரர்கள் கண்ணுக்கும் காதுக்கும் எட்டாத தொலை உள்ளே நுழைந்ததும், அந்தத் தாடிக் காரக் கிழவன், உமாரின் குதிரைச் சேணத்தைப் பிடித்துக் கொண்டு, “குவாஜா அவர்களே, இந்த வழியே