இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
187
“மடையர்களே! என்ன செய்வதாம் என்ன செய்வது! போங்கள். அங்காடிச் சந்தையிலே அழகான ஆட்டக்காரிகள் நிற்பார்கள். போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து விட்டுத் திரும்பி வாருங்கள். நீே வித்தியாசப்படுகின்ற மணிக்கணக்கு ஓடி மறைந்துவிடும். பெரிய கணிதப் பேராசிரியர்கள் ஆராய்ச்சிசெய்ய வந்து விட்டார்கள்! எங்கேயாவது பள்ளிக்கூடத்திலே போய்ப் பாடம் நடத்துவதை விட்டு விட்டு, ஆராய்ச்சி செய்ய வந்துவிட்டார்கள்! போங்கள், போங்கள்! உபயோகமற்றவர்கள்!” என்று பொரிந்து தள்ளினான் உமார். இஸ்பிகாரியும் மற்ற ஆராய்ச்சியாளர்களும், வாயை முடிக்கொண்டு வெளியேறி விட்டார்கள். மைமன் மட்டும் ஆடாமல் அசையாமல் அச்சடித்த பதுமைபோல நின்றுகொண்டிருந்தான்.