பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

மைமன் தலையாட்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்யக்கூடிய நிலையில் இல்லை. “ஆ! அந்தச் சாவியை மட்டும் தேடி எடுத்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று கூறிய உமார்,

“என்னிடம் சொல். டோலமியின் கீழ்மேல் ரேகைகளும், தென் வட ரேகைகளும் சரியானவை அல்லவா? என்று மைமனைக் கேட்டான்.

“சரியானவைதான்! இதில் சந்தேகமென்ன? முப்பது தலைமுறைகளாக அதைப் பின்பற்றி வருகிறோமே!” என்றான்.

“அப்படியானால், இந்த நட்சத்திர அட்டவணையைப் பயன்படுத்துவதற்குரிய வழி அவருக்கு (டோலமிக்கு)த் தெரிந்திருக்கத்தான் வேண்டும். அவரால், இந்த அட்டவணைகளைச் சரியாகப் பயன்படுத்தமுடியும். ஆனால், நம்மைப் போல் வழி தெரியாமல் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் தவறும்படியே நேரிடும். ஆனால், இப்பொழுது நாம் இந்த அட்டவணையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாம் மட்டுமே சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று கூறி உமார் அந்த அட்டவணையின் மீது தன் கையை வைத்துக்காண்பித்தான்.

“உண்மையிலிருந்து பொய்யை ஒரு சின்னஞ்சிறிய மயிரே பிரித்துக் காண்பிக்க முடியுமானால், பொய் உண்மையாகி விடாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று மைமன் வேதாந்தம் பேசினான்.

உமார் மைமனைக் கூர்ந்து நோக்கினான். “மைமன், நீ வயது முதிர்ந்தவன், என்னை மன்னித்து விடு. பொய்யே உண்மையாக மாறக்கூடிய வழியை நீ எனக்குக் காட்டி இருப்பது தெரிகிறது; நன்றாகத் தெரிகிறது” என்றான்.

“யா அல்லா அதை யாராலும் பார்க்க முடியாது!”

“அப்படிச் சொல்லாதே! வழி மிக எளிமையானதுதான். நான் கேட்பதற்குப் பதில் சொல். இந்த அட்டவணையை நிசாப்பூரின் ரேகைக்குச் சரியாக மாற்றித் திருத்தினாய் அல்லவா? ஏன் அதை அப்படித் திருத்தினாய்?