பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209


“அருளாளனாகிய அல்லா அவரைக் காப்பாற்றுவாராக. சாதாரண எண்கள் சம்பந்தப்பட்ட கணக்குகளே என் மூளையைச் சிதற வைக்கின்றன. அவர் மூளை என்ன வாகுமோ” என்று கூறி இஸ்பிகாரி சிரித்தான். இஸ்பிகாரி மைமனிலும் இளமையும் தைரியமும் உள்ளவன்.

“சைபர் வட்டத்துக் கணக்குகளை அவர் போட்டுக் கொண்டிருக்கிறான்.”

“சைபர் என்றால்தான் ஒன்றுமில்லையே. அப்புறம் அதில் என்ன கணக்கு இருக்கிறது?’ என்று இஸ்பிகாரி கேட்டான். பழைய இஸ்லாமிய முறைப்படி, சைபருக்குக் கீழே ஒன்றுமில்லை என்ற முடிவு அந்தக் காலத்தில் இருந்தது.

“சைபருக்கப்பால் ஒன்றுமில்லை என்று நீ நினைக்கிறாய். ஆனால், கிரேக்கர்கள் இதே சைபரை சீரோ என்று அழைக்கிறார்கள். அந்த சீரோவுக்கு அப்பால் எத்தனை பெரிய பெரிய எண்கள் எல்லாம் இருக்கின்றன!” இஸ்பிகாரிக்கோ, இது ஏதோ பெரிய நம்ப முடியாத விஷயமாகவும், மாயவித்தை போலவும் தோன்றியது.

“நீ சொல்வது, ஏதோ கிரேக்கர்கள் காணும் கனவு போல இருக்கிறது. கிரேக்கர்கள் இந்த மாதிரியான வீண் கனவு காண்பதில் பெரிய ஆட்கள்தான். இப்படிப்பட்ட கனவுகளைக் கண்டு அவர்கள் வெளியிலும் சொல்லுவார்கள். ஆனால், இதனால், அவர்களுக்காவது, வேறு யாருக்காவது ஏதாவது நன்மையுண்டா என்றால் கிடையாது. ஏதாவது நிறைவேறக்கூடிய சங்கதியுண்டா என்றால் கிடையாது. அவர்களாவது, நல்ல நிலையில் இருந்தார்களா என்றால் அதுவும் கிடையாது. ஒரு கிரேக்க விஞ்ஞானி, அவன் பெயர் எனக்கு நினைவு வரவில்லை. இப்படித்தான் ஒரு அபூர்வக் கனவு கண்டு அதை வெளியிட்டான். இந்தப் பூமிக்கு அப்பால் ஏதாவது ஒரு பொருளை நிறுத்தி விட்டால், அதைக் கொண்டு இந்தப்பூமியை, இடம் மாற்றி விடலாம் அல்லது நகர்த்தி விடலாம் என்று கண்டு பிடித்தான். இப்படிப்பட்ட கற்பனையில் ஈடுபட்டிருந்த அவன், ஒரு போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு சாதாரணச் சிப்பாயால் கொல்லப் பட்டான். அவர்களுடைய பெரும் பேரரசர் இஸ்கந்தர் (அலெக்சாண்டர்) என்பவன் ஒரு பெரிய கனவு கண்டான்.

உ.க. 14