பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217


“தலைவரே! வலு மிக்கச் சொற்களைக் கூறிவிட்டீர்கள். இதோ, இந்த இரவில் எத்தனை மாற்றங்கள். இந்தக் கோபுரம் அசைகிறதே!” என்று கூறிக்கொண்டே, வரந்தைக் கைப்பிடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். “தலைவரே! உடனே தங்கள் சாபத்தை மாற்றுங்கள். இல்லாவிட்டால் நாம் விழுந்து விடுவோம்! இந்தக் கோபுரம் சுற்றுவதுபோல இருக்கிறது. நாம் கீழே விழப் போகிறோம். ஐயோ, ஐயோ!” என்று கத்தினான் ஜபாரக்.

“முட்டாளே, நாம் விழமாட்டோம். பூமி சுற்றினாலும், நாம் பத்திரமாகவே இருக்கிறோம். அந்த உலகங்களின் ஊடே, சூரியனைப் போல் பெரியபெரிய நிலையான அந்தக் கோளங்களின் ஊடே, வானவெளி வழியாக நாம் போய்க் கொண்டே இருக்கிறோம். நாம் நகருகிறோமே தவிர, அவை நகருவதில்லை. இது உனக்குத் தெரியவில்லையா, புரியவில்லையா? என்று ஒருவித வேகத்தோடு கேட்டான்.

“அல்லா என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கூவிக் கொண்டே ஜபாரக், தன் இரு கைகளாலும் தன் தலையைப் பிடித்துக் கொண்டே அழுதான். தன் அருமைத் தலைவனான உமாருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவன் நிச்சயமாக நினைத்துக் கொண்டான். “சுல்தானிடம் வேட்டையாடுவது பற்றி சொல்ல வேண்டும்! நான் போகிறேன்” என்று பதிலை எதிர்பார்க்காமல் கூவிக்கொண்டே எழுந்திருந்தான். உமாரின் அருகில் இருக்க விகடனுக்குப் பயமாக இருந்தது. பைத்தியத்தில் உமார் என்ன செய்வானோ என்று எண்ணிப் பயந்து, இருட்டிலே தட்டி முட்டிக் கொண்டு படிகளின் வழியாகக் கீழே இறங்கிப்போக ஆரம்பித்தான்.


29. ஏலத்தில் எடுத்த இசைக் குயில் ஆயிஷா!

அப்பொழுது ஜல்லாலியன் சகாப்தத்தின் ஏழாவது ஆண்டு நடந்து கொண்டிருந்தது. சிரியா தேசத்திலே படையெடுத்துச்சென்ற சுல்தான் மாலிக்ஷா, வெற்றியின் பெருமிதத்துடன் திரும்பி வந்திருந்தார். அந்தப் போரிலே தோற்றுப்போய் பிடிபட்ட அடிமைகளை நிசாப்பூர் அங்காடிச் சந்தையில் அடிமை ஏலம் போடும் கம்பத்தின் அருகில் அடிமை