பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220


என்ன ஏலம் எடுக்கிறீர்கள்? எனக்குப் பிச்சை போடுகிறீர்களா? என்று ஆத்திரத்துடன் கேட்டான்.”

“பாக்தாதிலே இது மாதிரிச் சிறுவர்கள் பத்துப் பொன்னுக்கும் குறைவாகவே கிடைப்பார்கள். உனக்குத் தானம் கொடுப்பதாகவே நினைத்துக்கொள். பனிரெண்டு பொன் நான்கு பணம்” என்றான் முதலில் கேட்ட பாரசீகத்தான்.

கடைசியாக ஒரு வியாபாரி அந்தச் சிறுவனைப் பதின்மூன்று பொன்னும் மூன்று பணமும் கொடுத்துவிட்டுக் கூட்டிக் கொண்டு போனான். அடிமைகள் வரிசையிலே உட்கார்ந்திருந்த கொலுசு அணிந்திருந்த அபிசீனியாக்காரி, பக்கத்தில் இருந்த பெண்ணிடம், தாங்களும், மிகக் குறைந்த விலைக்கே விற்கப்படக் கூடும் என்று கூறினாள்.

“இப்பொழுது விலை மிகக்குறைந்து போய்விட்டது. ஒரு தடவை சய்யித் என்பவர் என்னை முந்நூறு பொன் கொடுத்து வாங்கினார்” என்றாள் அவள்!

“அம்மா தாயே! அது நீ என்னைப் போல் சிறுமியாக இருந்த காலத்தில் இருந்திருக்கலாம்!” என்று அந்தச் சிறுமி கூறினாள்.

“இந்த ஊர்க்காரர்களைக் காட்டிலும் துருக்கியர்கள் பரவாயில்லை. பேரீச்சம் பழ வியாபாரம் செய்தாலும் இப்படிக் கருமிகளாக இருக்க மாட்டார்கள்” என்று அபிசீனியாக்காரி கூறிவிட்டு, “நூறு பொன்னுக்குக்கூட நீ விலைபோக மாட்டாய்!” என்றாள் கேலியாக.

அயீஷா என்ற அந்தப் பெண் தன் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு யோசித்தாள். அப்படி அவள் கால்களை மடித்து உட்கார்ந்து இருந்ததே ஒரு கவர்ச்சியாக இருந்தது. அவளுக்கு முத்துப்பற்களும் இளமையின் கட்டும் இருந்தது. பாரசீகத்தார் கண்களுக்கு வத்தலாகத் தெரியும் படியான உடல்தான்! இருந்தாலும், அதிகம் மெலிவல்ல; புதுமாதுள மொக்குபோல. அவள் ஹவுரானிலுள்ள பானுசாபா நகரத்தைச் சேர்ந்த அரபியப் பெண். அவளுடைய நிறம் பாரசீகத்துப் பெண்களின் நிறம்போன்ற வெளுப்பில்லாவிட்டாலும் அபிசீனியாக்காரியின் உடையதைப் போலக் கருப்பும் அல்ல. இந்தச் சந்தை