பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

221


ஏலத்துக்கு வராமல் தனி ஏலத்தில் விடப்படுவதாக இருந்தால் யாராவது ஒரு பிரபு அவளை விரும்பி வாங்கலாம். ஆனால்,

அபிசீனியாக்காரி தன் இளம் வயதிலிருந்தே அடிமையாக இருந்தே பழக்கப்பட்டவள். இந்த புத்திளம் அயிஷாவோ அப்படியல்ல. எவனாவது ரொட்டிக் கடைக்காரன் அவளை ஏலத்துக்கு எடுத்து அவளைத் தினசரி ரொட்டி அவிக்கச் சொல்லியும், கடினமான வேலைகளைக் கொடுத்தும் கஷ்டப்படுத்தி, விட்டு அதன் பிறகும் தன் ஆசைக்கிழத்தியாகவும் வைத்துக்கொள்ள நேர்ந்தால்.... அவளுக்கு வருத்தமாக இருந்தது.

“ஆண்டவனே, என்னை அப்படி விட்டுவிடாதே” என்று வேண்டிக் கொண்டாள்.

“பெண்ணே நீ வருத்தப்பட்டு என்ன செய்வது? உன் உடல் உழைப்பை வைத்துத்தான் உனக்கு விலையை வைப்பார்களே தவிர உன் அழகை வைத்து அல்ல. உழைப்புக்கு எந்த விலை மதிப்பு உனக்கு ஏற்படுமோ அதற்கு விற்கப்படப்போகிறாய். இதிலே எந்த விலைக்குப் போனால் என்ன? அடிமை அடிமைதான். காய்ந்த மரத்திலிருந்து கனியா கிடைக்கும்? என்று கூறி ஆயிஷாவின் நெற்றியில் ஆடிக்கொண்டிருந்த குட்டை மயிர்களை ஒதுக்கிவிட்டடாள். “இதோ பார்! அர்மேனியர்கள் இருவரும் இருபது பொன்னுக்குப் போயிருக்கிறார்கள். இது என்ன காலமோ?” என்று வியப்படைந்தாள்.

அயீஷா, முன்னொருமுறை பாக்தாதிலே விற்கப்பட்டிருக்கிறாள். இருப்பினும் பாலைவனப் பகுதியிலே பிறந்த அவளுடைய கடுமையான சுதந்திர வேட்கை அவள் உள்ளத்தைத் துன்புறுத்தியது. தன் முக்காட்டுத் துணியின் ஒரத்தின் வழியாக சுற்றிலும் கூடியுள்ள வாங்குவோர் கூட்டத்தைப் பார்த்தாள். தெருவில் பிறந்த வெறி நாய்கள் என்று வைதாள். பிறகு, எதுவும் பேசாமலே உட்கார்ந்திருந்தாள்.

குதிரையின்மேல் வந்த ஒருவன் கூட்டத்தின் கடைசியில் வந்து நின்றான். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் அவனுக்கும் வேற்றுமையிருந்தது. அவனுடைய பாகையின் மத்தியில் பச்சைக்கல் ஒன்று ஒளி வீசிக் கொண்டிருந்தது.