பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233

உட்கார்ந்து விருந்துண்ணும் பொழுது பேசுகிற எல்லா விஷயங்களையும், காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு அயீஷா கேட்டாள். தன்னுடைய அந்தப்புரச் சிறைக்குள்ளிருந்தபடியே, சிறுத்தைப் புலியின் காதுகளைப் பான்ற கூர்மையான தன் காதுகளில் படும் விஷயங்களையெல்லாம் மறவாமல் நினைவு வைத்துக்கொள்வாள். நடு நடுவே வந்திருக்கிற ஆட்களின் தோற்றத்தையும் கவனித்துக் கொண்டு, அவர்களுடைய இயல்புகளைப்பற்றி ஆராய்வாள்.

உமாரிடம் வந்தவர்களிலே, தலைநரைத்த அர்மீனிய, வியாபாரி ஒருவன். அவன் பெயர் அக்ரேனோஸ். அவனை, அயீஷா நல்லவனென்று மதித்தாள். அவன் உமாரிடம் தனித்திருந்து பேசும்போதெல்லாம், சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் நீலக்கற்களைப் பற்றியும், வைரம் வைடுரியம் ஆகியவற்றைப்பற்றியும், ஒட்டகச் சாரிகளிலே ஏற்றிவரும் யானைத் தந்தங்களைப் பற்றியும், ஆயிரக்கணக்கான பொன் இலாபம் கிடைக்கும் நூறாயிரம் வியாபாரங்களைப் பற்றியும் கூறுவான். உமாரின் வியாபார நண்பன் அக்ரோனோஸ் என்றும், விற்பனைசெய்ய வேண்டிய பெருஞ்சொத்துக்கள் பல உமாரிடம் இருக்கின்றன என்றும் அவர்கள் பேச்சிலிருந்து அயீஷா தெரிந்துகொண்டாள். அவளுக்காக அவன் கொடுத்த விலை, பிச்சைக்காரனுக்குக் கொடுத்த செப்புக் காசுக்குச் சமம் என்றும், அவன் செல்வநிலை அவ்வளவு உயர்ந்தது என்றும் அறிந்து கொண்டாள்.

உமாருடைய நண்பர்களிலே இன்னொருவன் ஒரு கவிஞன். இஸ்லி என்ற அவன் நேருக்கு நேர் ஒருவரைப் புகழ்ந்து பேசுவதிலே நிபுணன். அவன் உமாரை எல்லையில்லாமல் புகழ்வான். அரசரின் வான நூல் ஆராய்ச்சியாளர், கணிதம், விண்மீன் ஆராய்ச்சி, இசைக்கலை ஆகிய முத்துறையிலும் ற்றக் கற்றவர் என்றும் பள்ளிக்கூடங்களிலே பயிலும் இஸ்லாமியக் குழந்தைகளெல்லாம் உமாரின் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கின்றனவென்றும் கூறுவான். அவனுடைய வாய்ப் பேச்செல்லாம் உள்ளத்திலிருந்து வராதவை என்றே அயீஷா எண்ணினாள்.

ஒருமுறை மூஇஸ்ளலி, தானே எழுதிய செய்யுள் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தான்!