பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234


   அழகோவியம் நீ என்
   அருகிலே வந்தாலே
   அறையில் இன்பம் சேருதே - இந்த
   அறையும் சொர்க்கம் ஆகுதே - நல்ல
   அழகுக் காஷ்மீர் போலவே!
   எழில்மதி முகத்தின்
   எதிரில் வராமல் -
   இருக்கும் கரிய கூந்தலே - அது
   என்ன பாவம் செய்ததே - அது
   ஏனோ வெட்கம் கொண்டதே!
   பாவிகள் எல்லாம்
   பாழ்நர கடைதல்
   பாரில் இயற்கையல்லவோ? - இன்பப்
   பால்மதி முகத்தின் பக்கமே . அந்தப்
   பாவக் கூந்தல் இருப்பதேன்?
   அழகோவியம் நீ என்...

இந்தப் பாட்டு அழகாக இருப்பதாகவே ஆயீஷா கருதினாள். மூஇஸ்ளலி ஆவலுடன் உமாரிடம் தன் பாடலைப் பற்றிக் கருத்தைக் கேட்டபொழுது, காசர் குச்சிக் அரண்மனையின் தலைவனான அவன் “சுல்தானின் ஆஸ்தான கவியாக இருக்க நீ தகுதியுள்ளவன்தான் என்பதை இப்பாட்டு எடுத்துக் கூறுகிறது” என்று பதில் கூறினாள்.

கவிஞன் மூஇஸ்ளலி அன்று இரவு அதிகம் குடித்து விட்டு, அருகில் இருந்த வேதாந்தி ஒருவனிடம் கரிய கூந்தல் என்பதற்குப் பதில் சுருண்ட கூந்தல் என்று போட்டிருக்கலாமா என்று தன் கவியைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான். அந்த வேதாந்தி இருப்பது இல்லாதது உலக அன்பு என்று என்னென்னவோ புதிய புதிய சொற்களையெல்லாம் பயன்படுத்திப் பேசிக்கொண்டிருந்தபடியால் அவன் பேச்சு விளங்கவில்லை. குடித்திருந்த கவிஞன் மூஇஸ்ளலி, ஏதோ வேடிக்கையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு ஆபாசமான