பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242


“ஆனால...”

“ஒரு நாய் கூட உள்ளே வரக்கூடாது. மீறி வந்ததோ, உன் கால்களுக்குச் சவுக்கடி கிடைக்கும். போ. நிற்காதே!”

“ஆனாலும், தலைவரே ஒருவர்.”

“அட கடவுளே! நீ போகிறாயா, இல்லையா? என்று உமார் உறுமினான். அவன் ஓடி விட்டான். இருளின் இடையே வானில் மின்னும் நட்சத்திரங்களின் சிறிய ஒளி, தரையில் மரங்களின் ஊடே பரவிக்கிடந்தது. மெல்ல எழுந்த காற்று, குளத்தின் ஒரு சிறு அசைவை உண்டாக்கியது. உமாரின் சிந்தனை மீண்டும் வேலை செய்தது. நகரை நோக்கிச் செல்லும் மலைப் பதையிலே நடந்து செல்லும் காசாலி, தன்னந்தனியாக இருக்கும் நிலையிலும் மகிழ்ச்சி கண்டான். பலபேருக்கு மத்தியிலே வேலை செய்தாலும், உமாருக்கு எந்த வேதாந்தியைக் காட்டிலும் அதிகமான தனிமைநிலை இருப்பதாகத் தோன்றியது. காசாலி, தன்னுடைய கருத்துக்களைச் சீடர்களிடம் கூறி மகிழ முடியும். ஆனால், உமாருக்குத் தன் எண்ணங்களில் பங்கு கொள்ளக் கூடிய ஆள் யாரும் இல்லை.

இருளின் ஊடே இனிய வீணையின் நாதம் எழுந்தது. அத்துடன் ஒரு பெண்ணின் குரலும் இழைந்து வந்தது. பாலைவனத்துப் பாதையிலே போர்க்களத்திலிருந்து திரும்பி வரும் படைவீரர்கள் பாடுவது போன்ற கருத்துடைய பாடல் அது. அரபிமொழியிலே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்த அந்த ஆள், தனக்கு மிக அருகாமையிலேயே வீணையை மீட்டிக் கொண்டிருப்பதை உமார் உணர்ந்து கொண்டான்.

“என்ன இது? என்று உமார் கோபத்துடன் கேட்டான். இருள் நிறைந்த இடத்தை விட்டு ஆயீஷா வெளியே வந்தாள். மானைப்போன்று நடந்து வந்து அவனருகிலே உட்கார்ந்து கொண்டு, அவள் தன் மடியில் இருந்த வீணையை மீட்டத் தொடங்கினாள். முன்னேற்பாடாக, முகத்தை மறைத்திருந்த முக்காட்டை முழுக்க முழுக்க விலக்கி விட்டிருந்தாள். “பானு சாபா நகரத்தின் கீதத்தை நீங்கள் கேட்டதில்லையே? இதோ தொடர்ந்து பாடுகிறேன் தலைவரே கேளுங்கள்” என்று இனிய