243
குரலில் நரம்புகளை அதிர வைத்துத் தன் குரலுக்கு மெருகு சேர்த்தாள்.
“ சற்று மு ன், யாரும் தோட்டத்திற்குள்ளே வரக் கூடாதென்று கட்டளையிட்டேன். நீ எப்படி உள்ளே வந்தாய்? யார் உன்னை அனுமதித்தது? என்று கடுமையான குரலில் உமார் கேட்டான். தன்னுடைய தனிமையக் குலைப்பதற்கு ஏதாவது ஒரு சனியன் வந்து கொண்டே யிருக்கிறதே என்ற கோபம் உமாருக்கு.
“தாங்கள் கட்டளையிடும் நேரத்தில் நான் தோட்டத்திற்குள்ளேயேதான் இருந்தேன். ஆகையால், நான் தங்கள் உத்தரவை மீறி வரவில்லை” என்று ஆயிஷா கூறினாள்.
“சரி, சரி. பேசாமல் இரு” என்று எரிந்து விழுந்தான் உமார். பணிவுடன், வீணையைத் தூக்கி அப்புறம் வைத்து விட்டுக் கால்களை மடக்கிக் கொண்டு அங்கேயே உட்கார்ந்தாள். சிறிது கூட ஓசையெழுப்பாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் அவள் உட்கார்ந்திருந்தாள். பிறகு, பேசாமலும், ஒசைப் படாமலும் தன்னுடைய கூந்தலை அவிழ்த்து விட்டாள். தோளிலும், முதுகிலும் விரிந்து கிடந்த அந்தக் கூந்தலின் மெல்லியமணம் எங்கும் பறந்தது.
பிறகு சிறிது நேரம் தன் தலையை நிமிர்த்தி அண்ணாந்து விண்ணின் மீன்களை நோக்கினாள். அதன்பிறகு, தன்னுடைய காலில் அணிந்திருந்த வெள்ளித் தண்டைகளை