பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264


“மாலிக்ஷா அவர்களைப் புதியபுதிய படை யெடுப்புகளில் ஈடுபடுத்தி, அவரை ஒரு படைத் தளபதியின் நிலையில் வெகு தூரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டால் தாங்களே இந்த சாம்ராஜ்யத்தை அரசாளலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறீர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். இதுதான் உண்மை!”

நிசாம் ஒரு துணியை யெடுத்துத் தன் உதடுகளைத் துடைத்துக் கொண்டார். அவருடைய கை விரல்கள் நடுநடுவென்று நடுங்கின.

“உன்னைப்போல் இரண்டு மடங்கு வயதுடைய நான், என்னுடைய ஆயுள்காலத்திலே எனக்காக உழைக்கவில்லை யென்பதையும் இஸ்லாத்திற்க்காகவே பணிசெய்து வருகிறேன் என்பதையும் நீ மறுக்கிறாயா?”

“அது எனக்குத் தெரியும்” என்று உமார் கூறினான்.

“உன்னுடைய நோக்கம் எனக்குப் புரிகிறது. அரசாங்க நிதியிலிருந்து உனக்குப் பதினாயிரம் பொன்கொடுக்கச் சொல்கிறேன். அது போதுமா!” என்று நிசாம் கேட்டார்.

“அது போதாது! சுல்தான் முகமதுவின் தங்கச் சிங்காதனத்தைக் கொடுத்தாலும் எனக்குப் போதாது”

“பதினையாயிரம் பொன் தரச் சொல்கிறேன்.”

எதிரேயிருந்த வயது முதிர்ந்த அந்த மனிதனை உமார் நிமிர்ந்து பார்த்தான். இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துத் தன்னை வசப்படுத்த எண்ணும் சிறு மதியையும் நினைத்துப் பார்த்தான். “நிசாம் அவர்களே! இது நாள் வரையிலும் தாங்கள் எனக்கு உதவி செய்து வந்திருக்கிறீர்கள் என்பதை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை. ஆனால், தாங்கள் என்னை விலைக்கு வாங்கி விடவில்லை என்பதையும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். என்னை நானே விற்றுவிடவும் நான் எண்ணவில்லை.”

“அப்படியானால் அக்ரோனோசிடம் போ! மத விரோதிகளிடம் போ! எங்கேயாவது நீ விரும்புகிற இடத்துக்குப் போ! என்னுடைய ஆதரவை இனிமேல் எதிர்பார்க்காதே!