பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269

அதை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்குப் பலமுறை வந்து போன பழக்கமுடையவன் போல முன்னே நடந்தான்.

குவித்து வைத்திருந்த பொருள்களுக்கிடையேயும், குப்பைக் கூளங்களுக் கிடையேயும், உமாரை அழைத்துச்சென்ற அவன், ஒரு பெரிய கம்பளி முட்டையருகிலே வந்தவுடன், “கொஞ்சம் இதை நகர்த்துவதற்கு உதவி செய்யுங்கள். சிறிது தூரம் நகர்த்தினால் போதும் நாம் என்ன ஒற்றர் தலைவன் போல் பருமனாகவா இருக்கிறோம்?” என்றான்.

“நீதான் என்னோடு இருந்தால் எவ்விதமான ஆபத்தும் இல்லையே! ஏன் இந்த எலி வளைக்குள்ளே போய் ஒளிய வேண்டும்?” என்று உமார் கேட்டான்.

அக்ரோனோஸ் பொறுமையில்லாமல் நிலவறைப் படிகளை நோக்கினான். தான் மட்டுமே அந்த முட்டையை நகர்த்த வேண்டியிருந்தது.

அந்தக் கனத்தைத் தன்னால் தள்ள முடியாது என்றதும் அக்ரோனோஸ் தொடர்ந்து, “குவாஜா உமார் அவர்களே, ஒரு வேளை உங்கள் வீட்டிலேயிருந்தால், நான் பத்திரமாக இருக்கலாம்! ஆனால் சற்று முன்னே உங்கள் காலடியிலே சரணமடைந்தானே அந்தச் சிறுவன் தப்பினானா?” மதக் கலகத்திலிருந்து தப்பியோடுவது என் வாழ்வில் இது முதன் முறையல்ல. மேலும், டுன்டுஷ் என்னை எப்படியாவது பிடித்துவிடவும் என் மீது ஏதாவது குற்றம் சுமத்தி உடனடியாகக் கொன்று விடவும் காத்துக் கொண்டிருக்கிறான். இதை நான் உறுதியாகச் சொல்லமுடியும். என்னைக் கொன்று விட்டு என்னுடைய கடையில் உள்ள பொருள்களையெல்லாம் கொள்ளையடித்து விடுவான். தங்கள் பொருள்களும் அங்கேதான் இருக்கின்றன. தாங்கள் தயவுசெய்து என் பின்னே வாருங்கள்! இப்பொழுது இந்த மூட்டையை, இந்தக் கயிற்றைக் கொண்டு சுவர் அருகில் இழுத்து மறைக்க உதவி செய்யுங்கள்” என்றான்.

கம்பளி மூட்டை மறைத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சென்ற ஒரு குறுகிய வழியில் அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நின்று கவனித்த பிறகு அக்ரோனோஸ் உமாரை அழைத்துக் கொண்டு சிறுக சிறுக