பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273


அற்ப நேரத்துக்குத் தன் கண்களுக்கு அழகாகத் தோன்றிய பெண்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களில் இவள் யாரோ? என்று நினைத்த உமாருக்கு, அயீஷாவின் நினைவு வந்து இதயத்தில் இடம் பிடித்துக் கொண்டது.

“சரி நீ என்னை ஹாஸானிடம் அழைத்துச் செல்கிறாயா?” என்று கேட்டான்.

அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்த பேராசிரியரின் பக்கம் திரும்பினான் அக்ரோனோஸ் “நாங்கள் அங்கேதான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறிய அவர்கள் பேச்சில் துன்பம் தொனித்தது. “இருப்பினும், முற்றிலும் புதியவரான தங்களுக்கு அது எளிதான வழியல்ல; பாதுகாப்பானதுமல்ல. அரசரின் வானநூற்கலைஞர், நிசாப்பூர் நகரத்து குவாஜா உமார் என்ற உயர்ந்த நிலையில் இருந்தாலும்கூட அது தங்களை அழைத்துச் செல்ல உகந்த வழியல்ல.”

“நாங்கள் ஒரு புதிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அளவுக்குத் தங்களுக்கு எங்களைப்பற்றி நன்றாகத் தெரியும். அதைத் தெரிந்து கொண்டு, நாங்கள் இங்கே இருப்பதையும் பார்த்துவிட்டு, தாங்கள் வெளியிலே சென்று வீதியிலே திரியும் ஓர் ஒற்றனிடமோ, அல்லது ஒரு முல்லாவிடமோ இபின்கு ஷாக்கின் நிலவறையில், ஏழாவது கொள்கைக்காரர்களின் தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று சொன்னாலே போதும், எங்கள் உடல்களிலிருந்து எங்கள் தலைகள் உடனே துண்டித்து விடப்படும். அத்தனை ஆபத்தானது இந்த விஷயம்!”

“உண்மைதான்” என்று விரக்தியுடன் உமார் ஒப்புக்கொண்டான்.

“மிக மிக உண்மை! எங்களைப் பொறுத்தவரையில் தாங்கள் இஸ்லாத்தை மூடநம்பிக்கையுடன் பின்பற்றுகிறவர் அல்ல என்பது நன்றாகத் தெரியும். இன்னும் தாங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதி சொன்னால் அந்த உறுதி குலையாமல் காப்பாற்றுவீர்கள் என்பதையும் அறிவோம். ஆகவே, தாங்கள் இங்கே கண்டதையோ, ஹாஸனைப் பார்க்கப்போகும் வழிகளில் காணப் போவதையோ, தாங்கள் யாரிடமும்

உ.க. 18