பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

கூறமாட்டீர்கள் என்று உறுதிகூற வேண்டு மென்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

உமார் சிறிதுநேரம் யோசித்து விட்டு, “சரி நான் உறுதி கூறுகிறேன்” என்றான்.

“நன்று! நன்று!” என்று ஆமோதித்த அந்த சாமியார், “திருக்குரான் மீது ஆணையிட்டு நாம் சத்திம் செய்யவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், உண்மைவாதிகள்! இந்த உலக இயந்திரத்தில் கடவுளை எதிர்பார்ப்பதை நாங்கள் நிறுத்தி வெகு நாட்களாகின்றன. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த நாங்களும் தங்களை மோசம் செய்ய மாட்டோம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எங்களிலே யாரும் இதுவரை வாக்குமாறியதில்லை. எங்களிலே சிலர், இரகசியத்தை வெளியிடச் செய்வதற்காக உயிருடன் தோலுரிக்கப் பட்டிருக்கிறார்கள். உயிர்போயிருக்கிறதே தவிர, இரகசியம் போனதில்லை!”

அதிகம் பேசாத அர்மீனியனான அக்ரோனோஸ், கண்ணாடிக் குவளைகளை எடுத்து, ஒரு சிறிய பீப்பாயிலிருந்து வெள்ளை மதுவை யூற்றி ஏழுபேருக்கும் கொண்டு வந்து கொடுப்பதை உமார் வியப்புடன் கவனித்தான்.

“காவல்காரர்களை ஏமாற்றுவதற்காக நாம், திருமறையால் பழிக்கப்பட்ட மதுவை மறைவாகக் குடித்துவிட்டுப் பிதற்றுகிற குடிகாரக்கும்பலைப்போல் நடிக்க வேண்டும். நகர்க்காவலர்கள், இதுபோன்ற சிறிய பாவங்களையும் அதற்காகக் கிடைக்கும் சிறிய கைக்கூலியையும் நம்பித்தான் வாழ்கிறார்கள்! இப்பொழுது உங்கள் குவளைகளைத் தூக்கிக்கொள்ளுங்கள். எங்கே போகிறோம் என்றோ எதற்குப் போகிறோம் என்றோ நமக்குத் தெரியாது” என்று கூறிக் கொண்டே பேராசிரியர் உமாரை உற்று நோக்கினார்! தத்தம் குவளைகளை உயரத்துக்கி அனைவரும் மதுவைக் குடித்தார்கள்.

இரண்டுநாள் பயணத் தொலைவில் மலைப்பிரதேசத்தில் உள்ள ஓரிடத்தில் அனைவரும் சந்திக்க வேண்டுமென்று குறிப்பிட்டு விட்டு ஒவ்வொருவராக நிலவறையை விட்டு வெளிக்கிளம்பினார்கள். உமாருடன் கூடவே செல்ல வேண்டிய