பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276


33. திடுக்கிடும் கழுகுக்கூடு

அக்ரோனோஸும், உமாரும் தங்கள் குதிரைகளிலே சென்று கொண்டிருந்தார்கள். மூன்றாவது நாள் கதிரவன் மறைந்த பிறகு, அக்ரோனோஸ், உமாரை நிறுத்தி “மன்னிக்கவேண்டும். இனிமேல் செல்லக்கூடிய பாதையை வெளி ஆட்கள் தெரிந்து கொள்வது தடுக்கப் பெற்றிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே, உமாருடைய கண்களைத் துணியால் கட்டினான். அவர்களுடைய குதிரைகள் காஸ்வின் பிரதேசத்திற்கு மேலேயுள்ள குன்றுப் பிரதேசத்திலே நுழைந்து போய்க் கொண்டிருந்தன. உமார் கடைசியாகப் பார்த்தது, பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்குப் பிரதேசமும் அதற்கப்பால் இருந்த மரங்கள் அடர்ந்த குன்றுகளும்தாம்!

“நீயும் ஏழாவது கொள்கைக்காரர்களைச் சேர்ந்தவன் தானா?” என்று உமார் கேட்டான்.

அதற்கு அக்ரோனோஸ், அந்தப் பாதையிலே யாருமே இல்லாவிட்டாலும் கூட, உமாரின் அருகிலே நெருங்கி வந்து மெல்லிய குரலிலே, “நான் மலைத்தலைவருக்குத் தொண்டு செய்கிறேன். இந்தக் குன்றுகளிலே, ஹாசான் இபின் சாபா என்ற பெயரில் அவர் அழைக்கப்படுவதில்லை. தங்களுக்குத் தெரிந்த ஹாஸான், பாபிலோன், கெய்ரோ, ஜெருசலம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவன். அவனை இனிமேல் மறந்துவிடுங்கள். இப்பொழுது நாம் காணப்போகிறவர் மலைத்தலைவர். கொரசான் தேசத்திலே மட்டும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கூடியவர்கள் பதினாயிரம் பேர் இருக்கிறார்கள். அவருடைய ஆற்றல் பூமியை ஆளுகின்ற அரசர்களுக்கும் மேற்பட்டது.

பாபிலோனிய, புழுதி மண்ணில் கிடந்த பிணத்தின் அருகில் நடந்து சென்ற கழுகையும், வானத்தில் பறந்துசென்ற தபால் புறாவையும் நினைத்துப் பார்த்துக் கொண்டு உமார் பேசாமல் இருந்தான்.

“கடந்தவாரம் ரே நகரத்தில், நிசாம் அல்முல்க் அவர்களைப் பார்த்துவிட்டு வந்த மலைத்தலைவர் ஒரு விடுதிக்குள்ளே நுழைந்தார். அதை வீரர்களால் வளைத்துக் கொண்டு, உள்ளே நுழைந்து, ஒவ்வொரு அலமாரியையும் முட்டையையும்