பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

277


அவிழ்த்துப் பார்த்து மூலை முடுக்குகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்தும் கூட, அவ்ரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மலைத்தலைவர் கழுகுக் கூட்டுக்குப் புறப்பட்டு வந்ததை யூாருமே பார்க்கவில்லை. இருப்பினும், நம்மை எதிர்பார்த்துக் கொண்டு அவர் அங்கேயே இருக்கிறார்.”

“எங்கே!”

“கழுகுக்கூடு. அங்கேதான்! எல்லோருக்கும் இந்தப் பெயர் தெரியும். ஆனால் வழிதான் தெரியாது!”

“உனக்கு நன்றாகத் தெரியுமா”

“ஆம்! ஒருமுறைதான் கழுகுக்கூட்டின் வாசலைப் பார்த்திருக்கிறேன்” என்று அக்ரோனோஸ் ஒப்புக்கொண்டான்.

“என்னை அழைத்துவரச் சொல்லி, இந்த மலைத்தலைவன் உனக்கு ஆணையிட்டு ஒருவாரம் ஆகிறதா?”

“இல்லை. இரண்டு வருடங்கள் ஆகின்றன. உமார் கயாமுக்கும், நிசாம் அல்முல்க் அவர்களுக்கும் இடையே சச்சரவுப் புகையெழும்பும் நேரம் நெருங்கி வருகிறது. அது ஏற்பட்டதும், அவரைத்தேடி என்னிடம் அழைத்துவா. இங்கே அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்” என்றார்.

“ஆ! அப்படியானால், இந்த மலைத் தலைவனுக்கு மாயவித்தை தெரியும் என்று சொல்” என்று ஆச்சரியத்தோடு சொன்னான் உமார்.

“எனக்குத் தெரிந்த எந்த மனிதனைக் காட்டிலும், அவர் அதிக அறிவுள்ளவர். ஆற்றலின் இரகசியம் அவரிடம் அடங்கிக்கிடக்கிறது. அவருக்குப் பணியாமல் இருப்பதைவிடக் கீழ்ப்படிந்து நடப்பது நல்லது. நிசாம் அவர்கள் அவருடைய புத்தகத்தில் இவரைப் பற்றி எச்சரித்துச் சில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். தான் சாகும் வரையில் வெளிப்படாமல் இருக்கும்படி அந்த அத்தியாயங்களை மூடி முத்திரையிட்டு வைத்திருக்கிறோம். அது யாருக்குத்தெரியும்? ஆனாலும், அவர் இவருக்குப் பயப்படுகிறார் என்பது உண்மை.”

“நீ?’ என்று உமார் கேட்டதும் அக்ரோனோஸ் பதில் சொல்லாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். “அதோ