பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

விளங்கியது. கடைசியில் ஒரு படுக்கையறையை அடைந்தார்கள். அங்கு படுக்கையின் அருகிலே குளிர் போக்குவதற்காகக் கணப்பு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அருகில் இருந்த தட்டுகளிலே, பழங்களும், கேக்குகளும், ஒரு கண்ணாடிக் கூஜாவிலே திராட்சை மதுவும் இருந்தன.

ரக்கின் உட்டின் கூடவந்த கரிய பையனைக் காட்டி, “இதோ இவன் தங்களை அடிமை. ஆபத்திலிருந்து தாங்கள் தப்பி வந்துவிட்டபடியால், அமைதியாக நீங்கள் தூங்கலாம். தங்கள் கனவுகள் இன்பமாக இருப்பதாக!” என்று கூறி விடைப்பெற்றுச் சென்றுவிட்டான்.

பிறகு, உமார் சிறிதளவு சாப்பிட்டு விட்டு தட்டை அந்த அடிமைப்பையனிடம் கொடுத்தான். அந்த மதுவில் ஒரு குவளை குடித்தான். அது காரமாகவும் மணமாகவும் இருந்தது. துப்பாக்கியால் வெளிநோக்கிச் சுடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சுவர்த்துவாரத்தின் வழியாக வெளியில் நோக்கினான் உமார்.

மலைக்காற்று மிகக் குளுமையாக வீசியது. எனவே போர்வைகளை எடுத்துத் தன் உடலைச் சுற்றி மூடிக்கொண்டு எரிந்து கொண்டிருக்கும் கணப்பில் இருந்த சிவந்த தணலைப் பார்த்துக்கொண்டிருந்தான். தூக்கம் கண்ணைச் சுற்றிக்கொண்டு வந்தது. நெருப்பின் சிவப்பு நிறம் நீலநிறமாக மாறியது. கதவுக்கருகே சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அடிமைச் சிறுவனைக் கவனித்தான்.

அவனுடைய கரியநிறம் இலேசான வெள்ளை நிறமாக மாறியிருந்தது. அந்த அறையும் முன்னிருந்ததைக் காட்டிலும் பெரிதாகியிருந்தது. உயரம்கூட அதிகரித்திருந்தது.

ஆனால், உமார் தன்னுடைய உடல் நல நிலையும், அறிவு நிலையும் மாறவில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து காண்டான். கண்களை மூடிக்கொண்டே, “இந்த மலைப்பிரதேசத்துக்குத் தூக்கமே புதுமையானது” என்று எண்ணினான்.

கழுகுக்கூடு என்ற அந்தக் கோட்டை செங்குத்தான இரண்டு பள்ளத்தாக்குகளுக்கு ஊடே இருந்த ஒரு மலையின் உச்சியில் இருந்தது என்பதை மறுநாள் காலையில்தான் உமார் தெரிந்து