பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282


“நாங்கள் வெறும் பிரசாரகர்கள் என்றுதான் தாங்கள் கருதுவீர்கள்!” என்று சிரித்துக் கொண்டே, கூறிய ரக்கின் உட்டின் “நாங்கள் வெகுதூரத்தில் உள்ள வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவர்களாகவும், அடிக்கடி பலப்பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதாலும் பல மொழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. நான் கெய்ரோவைச் சேர்ந்தவன்.

ஆனால், பாரசீக மொழியிலும் நன்றாகப் பேசுகிறேன்! இதை நீங்கள் கவனித்திருக்கலாம் நூல்நிலையத்திற்குச் செல்வது உங்களுக்கு விருப்பமாயிருக்குமோ? வந்து எங்கள் நூல் நிலையத்தைப் பாருங்களேன்” என்று அழைத்தான்.

நடுவில் இருந்த படிக்கட்டுப் பாதையின் வழியாக அவன் உமாரை யழைத்துக் கொண்டு சென்றான். முதல் தளத்தில் இறங்கியதுமே அவர்கள் ஒரு பெரிய கூடத்தின் உள்ளே நுழைந்து சென்றார்கள். அந்தக் கூடம் பலப்பல சிறுசிறு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த அறைகளுக்குள்ளே எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே படிக்கும் மேசைகளுக்கெதிரே பலவித மனிதர்கள், புத்தகங்களிலே ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார்கள். கிரேக்க மொழிக்கையெழுத்துப் பிரதி நூல்கள் இருந்த அலமாரிகளை, அதிசயத்துடன் உமார் நின்று கவனித்தான்.

வரைவுப் படங்களைக் கொண்டு அவற்றில் ஒரு புத்தகம், அறிஞர் அரிஸ்டார்ச்சஸ் எழுதிய “நிலவு வழியும் கிரகணங்களும்” என்ற ஆராய்ச்சி நூலொன்று தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றொன்று அறிஞர் பிளேட்டின்ஸ் அவர்களின் பெரும் நூல்.

“நான் இந்த நூல்களை இதற்கு முன் பார்த்ததில்லை” என்று உமார் கூறினான்.

“ஆம்! அலெக்சாண்டிரியா நகரத்து நூல் நிலையத்திலே நெருப்பு வைத்தபோது, நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்ட புத்தகங்கள் இவை. இவற்றை எகிப்திலிருந்து இங்கு கொண்டு வந்தோம். தப்பிப்பிழைத்த சில புத்தகங்களையும், அவர்கள் அடுப்பெறிக்கப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று கதை வழங்குகிறது. இருப்பினும் பலநூல்கள் முஸ்லிம்கள் கையில்