பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

285


ஒவ்வொரு நாள் இரவிலும் உமார் தூங்கும்போது, அறைகுறையான விசித்திரக் கனவுகள், முந்திய மாலையில் நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட கனவுகள் தோன்றின. அவனுடைய அறையின் சுவர் விசித்திரமான புதிய புதிய நிறங்களில் தோன்றின. இருப்பினும் தான் நல்ல உடல் நலம் மனநலத்துடன் இருப்பதாகவே தெரிந்து கொண்டான். ஒருவேளை மலைக்காற்றின் தன்மையாலும், தான் குடிக்கும் காரமான மதுவின் தன்மையாலும் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாமென எண்ணினான்.

இருப்பினும் வானில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக கூடுதலாக அந்தக் கனவுகள் வரவில்லை, நிசாப்பூரிலே தோன்றாத சிலಶ್ಗ வடக்குத் திசையின் அடிவானத்தின் ஓரத்திலே தோன்றியிருப்பதை அவன், அந்த இடத்திலிருந்து பார்க்க முடிந்தது. ஒருநாள் பின் மாலைப் பொழுதிலே ஒரு கோபுரத்தின் மேலே நின்று வானை நோக்கிக் கொண்டிருந்த உமாரிடம் ரக்கின் உட்டின் வந்தான். ஆர்வமும் உணர்ச்சியும் கலந்த குரலில், “எங்கள் தலைவர், தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் விரைந்து செல்ல வேண்டும்” எனறான்.

உமார் தான் எழுதிக் கொண்டிருந்த வரைவு படத்தை அங்கேயே வைத்துவிட்டு, ரக்கின் உட்டினைப் பின் தொடர்ந்து போனான். போகும் வழியிலேயே “இந்தக் கோட்டைச் சுவருக்கு வெளியேயுள்ள எந்த மனிதனும் பாராத விஷயங்களைத் தாங்கள் பார்க்கப் போகிறீர்கள். என்னைத் தொடர்ந்து வாருங்கள். காணும் விஷயங்களைப் பற்றி எதுவும் சொல்ல நினைத்தால் என்னிடம் சொல்லுங்கள் வேறு யாரிடமும் சொல்லாதீர்கள்” என்று அவன் குறிப்பாகச் சொன்னான்.

ஓடுவது போன்ற வேகத்துடன், அவன் உமாரை அழைத்துக் கொண்டு கோபுரத்திலிருந்து இறங்கி வந்து, நடுக்கூடத்தைக் கடந்து, புத்தக நிலையத்திற்குச் சென்றான். அங்கிருந்த வேறொரு கதவைத் திறந்து கொண்டு, பாதையில் செதுக்கிய படிக்கட்டின் வழியாக இறங்கிச் சென்றார்கள். படிக்கட்டின் பக்கங்களிலே திரும்பி எதையும் பார்க்க முடியவில்லை. குளிர்ந்த காற்று ஜில்லென்று மேல் நோக்கி வீசியது. படிகள் கீழே போய்க் கொண்டே இருந்தன. உமார் ஒரு குறுகிய மலைக் குகை பாதை வழியாகப் போவதாக அறிந்தான்.