பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

299


“அதுவா? அது ஒரு குறிப்பிடத் தகுந்த செயற்கை சொர்க்கம்” என்று உமார் சிந்தித்துப் பதில் கூறினான். தன்னுடைய பார்வையிலோ, குரலிலோ வியப்புச் சற்றும் வெளிப்படாதபடி, “செயற்கையா? என்று ஹாஸான் கேட்டான்.

“ஆம்! நிலவு வானிலே மிகமிகத் தாழ்ந்து இருந்தது.”

“அப்புறம்?”

உமார் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டான். இப்பொழுது அவனுடைய அரைகுறைத் தூக்கமும் போய் முழு விழிப்பு ஏற்பட்டு விட்டது. ‘உன்னுடைய சொர்க்கத்திலே இருந்த அந்த அழகு தேவதை ஏற்கெனவே எனக்குத் தெரிந்த பெண்.’,

“இருக்க முடியாதே! அந்தப் பெண் யார்?”

“ஏரியிலே மிதந்த படகிலே இருந்தவள், பைஸாஸ்டின் நகரத்து ஸோயி என்பவள்.”

சாதாரணமாக எந்த மனிதரிடமும் இல்லாத ஒரு திறமை ஹாஸானிடம் இருந்தது. அவன் தன்னுடைய திட்டத்தை உடனுக்குடன் மாற்றிக் கொள்வான். தன்னுடைய நோக்கம் வெளித் தோற்றத்தில் தெரியாதபடியே நடந்து கொள்வதில் சமர்த்தன். அவனுடைய ஒற்றர்கள் மிகத் திறமையும் முன்யோசனையும் வாய்ந்தவர்கள். அவர்கள், மதுவும் மங்கையரும் இருந்தால், உமார் மனத்தை அடிமைப் படுத்துவது மிக எளிதென்று உறுதியாகக் கூறியிருந்தார்கள்.

இனி, அவற்றை நம்பிப் பயனில்லை என்று ஹாஸான் தெரிந்து கொண்டான். அவன் புன்சிரிப்புடன்

“என்னுடைய சுவர்க்கத்தில் மது எப்படியிருந்தது? உனக்குப் பிடித்திருக்குமே?”

“ஆகா! மிக நன்றாக இருந்தது!”

“வான நூல் சாஸ்திரியான உனக்கு நிலவு மனதுக்குப் பிடித்தமாயில்லை என்பதைக் காண வருந்துகிறேன். துரதிர்ஷ்டவசமாகப் பகல் வெளிச்சம் தன் ஒளியை அதற்குக் கடன் கொடுக்க முடியாது போய்விட்டது. ஆனால் என்னுடைய “அர்ப்பணம் செய்தோர்” யாரும் அதைப்பற்றி