பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

உங்களிலேயும் ஏழு பிரிவுகள் இருக்குமென்று நான் எதிர்பார்த்தேன்.”

“நன்று நன்று!” என்று சிரித்துக் கொண்டே பாராட்டிப் பேசிய ஹாஸான், “நீ இரும்பைப் பிளக்கும் கூரிய பதமுள்ள உருக்குக் கத்தி போன்றவன். நீ மிகப் புகழ் அடைவாய் என்று அக்ரோனோஸ் கூறுவான். ஆனால் நீ புகழுக்கும் மேலான மதிப்புக்குரியவன் என்றே நான் கூறுவேன். கழுகுக்கூட்டில் வேறு என்ன இரகசியங்களை நீ கண்டு பிடித்தாய்? என்று மெதுவாகப் பதம் பார்க்கத் தொடங்கினான்.

ஹாஸானை நேரடியாக எதிர்த்துக் கொள்வதா அல்லது, அவனை நயந்து பேசுவதா என்று சற்றுநேரமே உமார் யோசித்தான். தன்னுடைய பலக்குறைவைக் காண்பித்துக் கொள்வதற்கு அந்தக் கழுகுக்கூடு ஏற்றதல்ல என்று முடிவுக்கு வந்தான்.

“குதிரைத் தபாலில் செய்தி வந்து சேருவதற்கு முன்பாகவே, அந்தச் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் உன் இரகசியத்தை நான் தெரிந்து கொண்டேன்” என்றான் உமார்.

“நான் தந்திரங்களைக் கையாளுகிறேன் என்று எந்த நாய் சொன்னது? இது என்ன பொய்?” என்று கேட்டான். அவனுடைய கண்கள் நம்பிக்கையில்லாமல் உமாரை நோக்கின.

“எந்த நாயும் இல்லை! ஒரு பருந்து இதை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தது. அபபொழுது நான் ரே நகருக்குச் சென்று கொண்டிருந்தேன்” என்று கூறித் தன் இடுப்பில் இருந்த குழாயை எடுத்து அவன் கையில் கொடுத்தான்.

ஹாஸான் அதை வாங்கி விரைவாகப் படித்தான். உமார் ரே நகருக்குச் செல்வதாக அதன் உள் இருந்த கடிதத்தில் எழுதியிருந்தது. அவனுடைய கோபத்தை வியப்பு பறக்கடித்தது.

“அல்லா அல்லா! ஆனால் நீ அதிர்ஷ்டக்காரன்தான். நினைக்க முடியாத அதிர்ஷ்டம் உன்னைச் சேர்ந்திருக்கிறது. தபால் புறாவைப் பிடித்து வருவதற்குப் பருந்தைத் தவிர வேறு எதனாலும் முடியாது” என்று கூறிக்கொண்டே, தனக்குள்ளே வேறோரு திட்டம் போட்டுக் கொண்டு, “உலகத்துச் செய்திகளை