பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

அழிந்து, ஒன்றும் மிஞ்சாமல் போய்விடும்! கோயில்களிலும் மட்ங்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிற மகான்களின் எலும்புகள், மயிர்கள், பற்கள்போல், மதங்களின் சிற்சில பகுதிகளே மிஞ்சும்.

பூமியில் இருக்கும் மதவாதிகள் அனைவருக்கும் நான் ஒரு செய்தி கூற முடியுமானால், நான் என்ன சொல்லுவேன் தெரியுமா! கோயில்களையும், தொழுகை மடங்களையும், சிங்காதனங்களையும் தூக்கி எறியுங்கள். சிங்காதனங்களின் மேல் இருப்பவர்களும், மதங்களின் வணங்கு நிலையங்களைக் காத்துக் கொண்டு கிடப்பவர்களும் சாதாரண மனிதர்களே! பொய்யுரைகளின் பின்னாலே மறைந்து கொண்டு சக்திவாய்ந்தவர்களாகக் காட்சியளிக்கிறார்கள் தொடக்க காலத்தில் சூரிய தேவனுக்குப் படையலிட்ட காட்டுமிராண்டிகளைக் காட்டிலும் இறையைத் தொழும் மக்களும் உயர்ந்தவர்கள் அல்ல என்றே நான் கூறுவேன். இது உண்மையல்லவா?”

“சுல்தான் மாலிக்ஷா சாதாரண மனிதர்தான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவரைச் சிங்காதனத்திலிருந்து அப்புறப் படுத்திவிட்டால், அவருடைய இடத்தில் நீ எதை உட்காரவைப்பாய்? அந்தக் கடமையைச் செய்ய ஏதாவது ஒன்று வேண்டுமே!” என்று அறிஞன் உமார் கேட்டான்.

“முதல் வேலை, சிங்காதனத்தையும் அதனைச் சேர்ந்த ஆட்சிக்குழுக்களையும் ஒழிப்பதாகும். உனக்கு நான்கு மாலிக்ஷா காட்டிலும் அதிகமான அறிவு இருக்கிறது. நாம் ஏன் அரச வணக்கத்திற்கு நம்மை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்? அறியாமை சூழ்ந்திருந்த அந்தக் காலத்திலிருந்து மனிதர்கள் காரண ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். முடிவில் மனிதர்கள் பூரணமான காரண அறிவைப் பெறுவார்கள், அவை இருக்கட்டும், இப்பொழுது நான் என்ன செய்திருக்கிறேன். பலரை மதமாற்றம் செய்திருக்கிறேன். பலரைக் கூட்டாளிகளாக்கியிருக்கிறேன். அவர்கள் பழைய மதத்தில் அதிருப்தி அடைந்தவர்கள். இரகசியமாக நாங்கள் புதிய பிரசாரத்தை போதித்து வருகிறோம்.”

ஹாசான், இந்த இடத்தில், சிறிது நேரம் பேசாமலிருந்து, மறுபடியும் தொடர்ந்து பேசினான். “நீ நூல் நிலையத்தைப்