பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

இஸ்பாஹாளிலேயுள்ள பாழடைந்த அரண்மனைகளிலே நான் கண்டிருக்கிறேன். இப்பொழுது என்னுடைய “அர்ப்பணம் செய்தவர்கள்” கூட்டத்தின் பக்தியை வளர்ப்பதற்காக, இந்த இடத்திலே இஸ்லாமியத் தொழுகை முறையைச் சில புதிய மாறுதல்களுடன் வகுத்து நடத்துகிறேன்.”

இந்த இடத்திலே ஹாஸான் குரலிலே ஒரு மாற்றம் ஏற்பட்டது!

“ஏன் கூடாது? ஜெருசலத்தில் யூத அரசன் டேவிட் ஒரு பாறையருகிலே படுத்துக் கனவு கண்டான் என்பதற்காக அந்த இடத்தில் இருந்து ரோமானிய மத குருக்கள் பக்திசெய்து வந்தார்கள். அதே ஜெருசலத்துப் பாறை உள்ள இடத்தை முகமது புனித ஸ்தலமாக ஆக்கவில்லையா? யூத அரசன் கனவு காண்பதற்கு முன்னாலே அந்தப்பாறை எதுவாக இருந்திருக்கும்? ஒரு சாதாரணக் கல்லாக அல்லது பழங்காலத்து அநாகரிக மக்கள் வழிபட்டுவந்த உருவமாகவோதான் இருந்திருக்க வேண்டும்.”

இந்த இரண்டு நிமிட நேரமும் புது மனிதனாக மாறிக் கேள்விகளை அள்ளிப் பொழிந்த ஹாஸான் ஓர் இருண்ட பாதை வழியாக உமாரை அழைத்துக் கொண்டு சென்றான். கதகதப்பான காற்று அவர்களைத் தள்ளிக் கொண்டு போனது. இந்த வெளிக்காற்று குகையின் பகுதிகளில் எல்லாம் புகுந்து வீசியதால்தான், மனிதர்கள் மூச்சுவிட முடிகிற தென்பதையும், நெருப்பு எரிய முடிகிறதென்பதையும் உமார் உணர்ந்து கொண்டான். இருண்ட வழியாகப் பல திருப்பங்களிலும் திரும்பித் திரும்பிக் கடைசியாக அவர்கள், வெளிப்புறத்திற்கு வந்தார்கள், நீலவானும் நிறைந்த வெளிச்சமும் மலையின் வெளிப்புறத்திலே வந்ததும், சிதறிக்கிடந்த பாறைத் துண்டுகளின்மேல் ஏறிச்சென்று ஒரு செங்குத்தான பாறையுச்சிக்கு வந்து நின்றார்கள். அங்கே நின்று கொண்டிருந்த ஹாஸான், தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டு, “ஓ! என் அர்ப்பணம் செய்தவர்களே! சொர்க்கபோகம் உங்களை வந்து சேர்வதாகுக! அல்லாவின் ஆற்றல் உங்கள் கரங்களை ஆற்றலுடையதாக்குக?” என்று கூவினான்.

அவர்கள் நின்று கொண்டிருந்த பாறையுச்சி, இயற்கையாக அமைந்த ஒரு மேடைபோல் இருந்தது. அதன் எதிரில் இருந்த