பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

313

சமதளத்திலே, அன்று கத்தி நடனத்தின்போது கூடியிருந்த கூட்டத்தார் அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே குரலிலே “எங்கள் தலைவரே! தங்களுக்கு சாந்தியுண்டாவதாக!” என்று கூவினார்கள்.

உயர்த்திய குரலிலே, அந்தப்பாறை மேட்டின் உச்சியிலே, கீழே நின்றுகொண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு நேரே நின்ற ஹாஸ்ான் பார்ப்பதற்கு ஒரு தேவதூதன் போல காட்சியளித்தான். கீழே கூடியிருக்கும் அறிவற்ற மக்களுக்கு, அவன் தங்களை எந்த சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியவன் என்ற நம்பிக்கையை அந்தத் தோற்றம் அளித்தது. அங்கே தொடர்ந்து நின்று கொண்டிருந்து தன் மகத்துவத்தை வீண் ஆக்காமல், சட்டென்று திரும்பிப் பாறையைவிட்டுக் கீழே உமாரையும் இழுத்துக் கொண்டு இறங்கினான்.

பிறகு அவர்கள் கோட்டைச் சுவற்றின்மீது காவலுக்காக உள்ள அகன்ற இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது கதிரவன் மறைந்து கொண்டிருந்தது. அர்ப்பணம் செய்தவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அங்கே காவல் காத்துக்கொண்டு நின்றவர்கள், தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு மாலைத் தொழுகை நடத்துவதற்காக ஆயத்தமானார்கள்.

“நீ இதற்கு முன்னால், அதிசய சம்பவங்கள் நடந்ததைக்கண்டிருக்க மாட்டாயே! இதோ பார்!” என்று உமாரிடம் கூறிய ஹாஸான் மண்டியிட்டிருந்த அந்த இளைஞர்களின் பின்புறமாகச் சென்று, வணங்கிக் குனிந்த அவர்களின் தோள்களிலே தன் கைகளை வைத்தான். அவர்கள் நிமிர்ந்து பார்த்து, அவர்களுடைய தலைவனின் முகத்தை ரட்சியுடன் பார்த்தார்கள். அவர்களுடைய கண்கள் ஹாஸானுடைய கண்களில் பிணிப்புண்டு கிடந்தன.

“ஊய்! உங்களுடைய காலம் நெருங்கிவிட்டது. சொர்க்கம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான் உங்களை விடுவிக்கிறேன்! பாய்ந்து செல்லுங்கள்!” என்றான். கடைசிச் சொற்கள் சவுக்கு வீச்சுப்போல வெளிப்பட்டதும், மூன்று மெல்லிய உருவங்கள் நடுங்கித் துடித்துக் கொண்டே கோட்டைச்