இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
334
வேட்டிையாடிக் கொன்ற மிருகங்களை எண்ணிப்பார்த்தேன். மொத்தம் ஒன்பதாயிரம் உயிர்களை ஆண்டவன் படைத்த உயிர்களை, வீணாகக் கொன்றிருக்கிறேன். அதற்குப் பிராயச்சித்தமாக ஒன்பதாயிரம் வெள்ளிகளை ஏழைகளுக்குத் தானமாகக் கொடுக்கப் போகிறேன். என்ன சொல்கிறாய்?’
‘ஆண்டவன் பெயரால் அப்படியே செய்யுங்கள்!’
சிறிது நேரத்திற்குப் பிறகு, சுல்தானிடம் விடைபெற்றது. அவனுடைய அந்தப்புரக் கூடத்திற்குச் சென்றான். அங்கே, ஓர் ஆட்டக்காரிபோல சலாமிட்டு வணங்கி அயீஷா அவனை வரவேற்றாள். அந்தக் கூடத்திலே, அவள் இஸ்பாகான் சந்தையிலே வாங்கி வந்த புதிய புதிய பொருள்களை ஆங்காங்கே அடுக்கி வைத்திருந்தான்.