பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

337


உமார் கீழே இறங்கிவந்து பிணத்தை மூடி வைத்திருந்த துணியை அகற்றினான். அவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை. அவனுடைய ஆருயிர்த்தோழன் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு உற்ற துணைவனாக இருந்த கூணன், விகடன் ஜபாரக் கழுத்தில் வெட்டுப்பட்டுப் பிணமாகிக்கிடந்தான். அவனுடைய நாக்கு வேரோடு வெளியில் அகற்றப்பட்டிருந்தது.

‘உன்னுடைய தலைவனை உடனே இங்கு வரச்சொல்’ என்றான் உமார், சிறிது நேரத்தில் டுன்டுஷ் அங்கு வந்து சேர்ந்தான்.

‘பள்ளி வாசலுக்கு வெகுதூரத்தில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள பாதையில் பிணம் கிடந்தது. ஆனால் அந்த இடத்திலே கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை, வேறு எங்கோ கொலைசெய்து அங்கே கொண்டுவந்து போட்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவன் செத்துக்கிடந்த இடத்திலே தரையில் இரத்தக்கறையேயில்லை!’

உமாருக்கு இது ஹாஸானுடைய ஆட்களின் வேலைதான் என்று தெரிந்தது. ஏனெனில் முதல் நாள் தன்னைச் சந்தித்தபோது, ஜபாரக்கிடம், யாரோ ஒருவன் சாமியார் வேடத்தில் இருந்தவன் வந்துபேசிக் கொண்டிருந்ததாகவும், அவன், ஜம்மி மசூதிக்குப் பின்னால் உள்ள அக்கினிபுத்திரன் வீட்டிலே, செத்துச் சொர்க்கம்போன ஒரு மனிதன் பிழைத்து எழுந்து வந்து, சொர்க்கத்தின் அனுபவத்தைக் கூறியதாகவும். அது தான் கழுகுக்கூட்டிலே கண்ட காட்சியாகவே இருந்ததையும் உமார் சிந்தித்துப் பார்த்தான்.

சந்தேகமில்லாமல். ஜபாரக் அந்த வீட்டிலேதான் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான்.

‘அக்கினி புத்திரன் வீடு எங்கே இருக்கிறது தெரியுமா?’ என்று டுன்டுவிடம் கேட்டான்.

‘நான் கேள்விப்பட்டதேயில்லை’ என்றான் டுன்டுஷ்.

உமார் டுன்டுவிடம் முன்னிரவு தனக்குக்கிடைத்த எச்சரிக்கைக் கடிதத்தைப்பற்றிக் கூறினான். அயீஷா பின்னால் திரைமறையில் இருந்தபடியே ‘ரொட்டியையும் கத்தியையும்