பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

பற்றிக் கூறுங்கள்’ என்று ஞாபகப்படுத்தினாள்.

இதைக்கேட்ட டுன்டுஷ், ‘இது போலவே, தலைமாட்டிலே ரொட்டியும் கத்தியும் கண்ட சில மனிதர்கள் இப்போது ஆளே காணப்படாமல் போய்விட்டார்கள்’ என்றான்.

‘இது அர்ப்பணம் செய்தவர்களின் வேலையாகத்தான் இருக்கவேண்டும்’ என்றான் உமார்.

‘யார்? என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று விளக்கங் கேட்டான் டுன்டுஷ்.

‘அர்ப்பணம் செய்தவர்கள் ஏழாவது கொள்கைக்காரர்களின் தலைவனும் கழுகுக் கூட்டின் தலைவனும் பிறப்பிறப்புப் பெருந்தலைவனுமான ஹாஸான் இபின் சாபா என்பவனுடைய ஆட்கள், குத்துக்கத்தி பிடித்த கொலைக்கஞ்சாப் பாதகர்கள், மயக்க மருந்து தின்னும் மதிகெட்டவர்கள்!’ என்று உமார் அடுக்கிக் கொண்டே போனான்.

‘தலைவரே! மறுபடியும் அந்தப் பெயரைச் சொல்லாதீர்கள், பயமாக இருக்கிறது!’ என்று டுன்டுஷ் வேண்டினான்.

‘அப்படியானால், உனக்கும் அவர்களைப்பற்றித் தெரியும் என்று சொல்’ என்ற உமார். ‘உனக்குத் தெரிந்ததை என்னிடம் அஞ்சாமல் சொல்’ என்றான்.

ஆனால், டுன்டுஷ் பயந்து கொண்டே மிக மெதுவான ரலில் பேசத் தொடங்கினான். அப்படிப் பேசும்போது எதிரில் திறந்திருந்த சன்னலுக்கப்பால் சீறிவரும் பாம்புகள் நூறு இருந்தால் எப்படிப் பயப்படுவானோ, அப்படிப்பட்ட பயத்துடன் அந்தச் சன்னலைப் பார்த்துக் கொண்டே பேசினான்.

‘எகிப்து தேசத்திலிருந்து பாரசீகத்திற்குள்ளே இந்த இயக்கம் வந்து சேர்ந்திருக்கிறது. இவர்களைப்பற்றி நிசாம் எச்சரிக்கை செய்து தன் குறிப்புப் புத்தகத்திலே எழுதியிருக்கிறார். இவர்களுடைய தலைவன், நம்பிக்கையுள்ள முஸ்லிம்களைப் பயமுறுத்தித் தன் புது ஏற்பாட்டிலே சேர்த்துவருகிறான். வியாபாரிகளை அதட்டி மிரட்டிப்பணம் பறிக்கிறான். ஒருவனுடைய தலைமாட்டிலே குத்துக்கத்தியும் ரொட்டியும் இருந்தால், அதற்கு நீ சாகிறாயா? வாழ்கிறாயா? என்று கேட்பதாகப் பொருள். வாழ்வதாக இருந்தால், மறுநாள்