பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

345


‘நான் தொந்தரவு கொடுக்கும் ஒவ்வொரு நாயையும் விரட்டிக் கொண்டிருக்க முடியாது’ என்று சிறிதுகூட நிலைமையை உணராமல் சுல்தான் பதில் அளித்தார்.

நிசாம், அவர்களுடைய கழுகுக்கூட்டைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும், பயங்கரச் செயல்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

சுல்தானுடைய ஆட்சி வீழ்ந்து புதியஅரசு எழப்போவதாக ஹாஸான் தீர்க்கதரிசனம் கூறியிருப்பதையும் கூறினார். அதற்கு, சுல்தான் ‘ஒவ்வொரு புதிய தீர்க்கதரிசியையும் தீர்த்துக் கொண்டிருப்பதாக இருந்தால் நான் வேட்டையாடுவது எப்போது? மற்ற காரியங்களைச் செய்வது எப்போது’ என்று கேட்டார்.

நிசாம் என்ன சொல்லியும் சுல்தான் கேட்கவில்லை. ஒருமுறை சுல்தான் தன்மீது அவநம்பிக்கை கொண்டபோதே, தன்னுடைய செல்வாக்குப் போய்விட்டது என்பதைத் தெரிந்து கொண்ட நிசாம், சலாம் செய்து விடைபெற்றுத் திரும்பிவிட்டார்.

விதியின் சக்கரம் மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது. காற்றடித்து அணைந்து போகும் விளக்குகள் போல எத்தனையோ உயிர்கள் இந்த உலகத்தைவிட்டுப் போயின. புதிய உயிர்கள் தோன்றின. இஸ்பகானிலிருந்த சுல்தான், நிசாப்பூர் நோக்கிப் புறப்பட்டார். நிசாம், பதவியைவிட்டு விலகிவிட்டாலும் தன் குறிப்புப் புத்தகங்களிலே பலபுதிய ஏடுகளை எழுதிக் கொண்டிருந்தார்.

நிசாப்பூருக்குச் செல்லும் வழியிலே சுல்தான் கூடாரம் அடித்திருந்தார். ஒருநாள் அந்தக் கூடாரத்திற்கு நேரே வானத்தில் ஒருவால் நட்சத்திரம் தோன்றியது. உமாரை அழைத்துவரச் சான்னார். இதன் அறிகுறி என்ன என்று கேட்டார். ஏதோ அபாயத்தின் அறிகுறி என்று உமார் சொன்னான்.

சுல்தானுக்கு அபாயமாகத் தோன்றியது ஹாஸான் ஒருவனே! வேறு எந்த அபாயமும் அந்தச்சமயத்தில் இல்லை. எனவே, ஒரு தளபதியை அழைத்து, பட்டாளத்தின் ஒரு பகுதியுடன் சென்று காஸ்வின் நகருக்கு வடக்கேயுள்ள