பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

மலைகளில் அமைந்துள்ள கழுகுக்கூடு என்ற கோட்டையை நிர்மூலமாக்கிவிட்டு வரும்படி ஆணையிட்டார்.

நிசாப்பூருக்குச் செல்ல அவருக்குப் பயமாக இருந்தது. எனவே வேட்டையாடும் சாக்கில் கூடாரத்திலேயே தங்கினார். உமாரையும் தன்னைவிட்டுப் பிரியலாகாதென்று ஆணையிட்டார்.

நள்ளிரவிலே அது நடந்தது. பிரபுக்கள் வாழும் பகுதியிலே ஓர் இளைஞன் வந்தான். நிசாம் அல்முல்க் அவர்களுடைய வீட்டைத்தேடிச் சென்று, ஏதோ வேண்டுகோள் விண்ணப்பிக்க வந்திருப்பதாகக் கூறினான். நிசாம் அவர்கள் எதிரில் வந்ததும், மற்றவர்கள் கவனித்துத் தடுக்கும் முன்பாகக் கத்தியால் குத்தி விட்டான். அந்த முதியவர், வாழ்நாளெல்லால் அக்கறை கொண்ட அந்தப்பெரிய மனிதர் வாழ்வின் கதை இவ்வாறாக முடிந்தது.

பிடிபட்ட அந்த இளைஞன் உடல், காவல்காரர்களால் பிய்த்தெறியப்பட்டது. சொர்க்கத்தைப்பற்றி ஏதோ சொல்லிக் கொண்டு அவன் உயிர் விட்டான்.

இதைக் கேள்விப்பட்ட சுல்தான், துர்க்குறியின செயல் இவ்வாறு நிறைவேறிவிட்டது என்று வருத்தத்துடன் கூறினார்.

நிசாமை நினைக்கும்போது அவருக்குத் தாங்கமுடியாத துக்கம் ஏற்பட்டது. நிசாமின் குறிப்பேடுகளைப் படித்துப் பார்த்த அவர் ஏற்கெனவே அனுப்பிய படைகளுடன், மேற்கொண்டு சில படைகளையும் கழுகுக்கூடு நோக்கியனுப்பினார்.

கொலைகாரர்களின் இருப்பிடத்தைக் குலைத்தெறியும்படி உத்தரவிட்டார் நிசாமின் குறிப்புகள் அந்தப் புதிய மதத்தின் பயங்கரத் தன்மையை அவருக்கு நன்றாக உணர்த்தின.

உமாரை நோக்கி,‘ நிசாம் அல்முல்க் உண்மையான ஊழியர். நான் இங்கேயேயிருந்து அவருக்காக ஒருமாதம் துக்கம் கொண்டாடப் போகிறேன். நீ வேண்டுமானால் நிசாப்பூருக்குப் போகலாம்’ என்று கூறிவிட்டார்.

ஹாஸானுடைய கோட்டை தொடர்ந்து தாக்கப்பட்டது. ஏதோ ஒர் இரகசிய வழியாக உள்ளுக்கும் வெளியேயும் மாறி மாறித்திரிந்தான் ஹாஸான். தான் எப்போதும்