பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

மதுக்குவளைதான் இருந்தது; மது இல்லை! மது ஜாடியில் கொஞ்ச நஞ்சமாவது மீதியிருக்காதா என்ற ஆவலோடு மூட்டையை அவிழ்த்து, அதில் இருந்த வெள்ளி ஜாடியைக் கையில் எடுத்துப் பார்த்தான். ரஹீமின் வாழ்வு என்னும் மது இருந்த கோப்பை அதிவிரைவில் காலியாகிவிட்டது அவன் இப்பொழுது சாவைத் தழுவிக் கொண்டு புதை குழியிலே கிடக்கிறான்.

அந்தத் துயர நினைவைக் கலைப்பது போல் அவனருகில் ஓர் ஒசை உண்டாயிற்று. படுக்கையறை உடைகளுடன் அவனருகில் தூங்கிக் கொண்டிருந்த அடிமைப்பெண் ஸோயி புரண்டு படுத்துப் பெருமூச்சு விட்டாள். உமார் குனிந்து அவள் கண்களை மூடிக் கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான். அவளுடைய அழகிய கண்கள் இருண்டு நனைந்து போய் இருந்தன. ஏதோ கவலையின் மிகுதியால் அந்தப் பெண் தனக்குத்தானே அழுது கொண்டு இருந்திருக்கிறாள்.

அவளை எழுப்பியபடி, “என்ன ஸோயி? என்று மிருதுவாக உமார் கேட்டான்.

கண்விழித்த அழகிஸோயி தன் உதடுகளை விரித்து உமாரை நோக்கிச் சிறிய புன்னகையொன்றை நெளியவிட்டாள். தான் கண்ணிர் விட்டதாக உமார் அறிந்து கொள்ளக் கூடாதென்று அவள் எண்ணினாள். தன் சொந்த தேசத்தை விட்டுப் புறப்படும் இந்த நீண்ட பயணத்தில், இந்தப்பெண் எதைப்பற்றி நினைத்துக் கொண்டு இருந்திருப்பாள் என்று உமார் வியந்தான். இப்படி, அவளைப்பற்றி அவன் சிந்தித்தது இதுதான் முதல் தடவை. ஓர் அடிமைப் பெண்ணுக்கும் பேரரசனாகிய சுல்தானுக்கு இருப்பது போல் கவலைகள் உண்டு. ஆனால் அதை வெளியே சொல்லிக் குறைப்படுவதற்குத்தான் அனுமதிக்கப் படுவதில்லை!

உமார், அழகி ஸோயியை நெருங்கி அவளுடைய கூந்தலைப் பரிவோடு ஒதுக்கிவிட்டான். அழகி வியப்போடும் ஆவலோடும் உமாரை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு அவனுக்குத் தன் பக்கத்தில் இடம் கொடுப்பதற்காக கொஞ்சம் பின்னுக்கு நகர்ந்து படுத்துக் கொண்டாள். இப்பொழுது அவள்