பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

உமாரிடம் மிதமாக இருப்பதாக ஆசிரியர் எண்ணினார். “கணிதம் என்பது, அஞ்ஞானத்திலிருந்து, அறிவுலகத்திற்கு அழைத்துச் செல்லும் பாலம் போன்றது, அஞ்ஞானத்தைக் கடப்பதற்குக் கணிதத்தைவிடச் சரியான பாலம் வேறு எதுவுமில்லை” என்று பேராசிரியர் அலி அடிக்கடி தம் மாணவர்களுக்குச் சொல்வது வழக்கம்.

மத நம்பிக்கையற்ற கிரேக்கர்களின் கணித ஆராய்ச்சியை அவர் அடியோடு வெறுத்தார். எண்களைத் தங்கள் அடிமைகளாக்கிய முதல் கணிதநூல் ஆசிரியர்களான பழங்காலத்து எகிப்தியர்களின் கணிதக் கலைகளை அவர் மனதாரப் பாராட்டினார். எகிப்தியரின் கணித வேலைகள் பலப்பல பெரிய கட்டிடங்களை எழுப்பப் பயன்பட்டு வந்தது.

ஒருநாள் மாணவர்களில் ஒருவன் ஆசிரியர் அலியை நோக்கி, “குவாஜா இமாம் அவர்களே! நமக்கு மாதங்களைக் கணக்கிடுவதற்கு தீர்க்கதரிசி முகமது நபியவர்கள் ஏற்பாடு செய்த பிறைக்கணக்கு இருக்கிறது, ஒளி வருவதற்குக் கதிரவன் இருக்கிறான். அப்படியிருக்கும்போது, நட்சத்திரங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது என்ன பயன் தரும்? என்று கேட்டான்.

பேராசிரியர் அலி அவர்கள், மெக்காவுக்குப் போய் வந்தவர். புனிதமான ஹஜ்யாத்திரை செய்து வந்ததற்கு அடையாளமாக அவர் ஒரு பச்சைத் தலைப்பாகை அணிந்திருப்பார். அவருக்கு நட்சத்திரப் பலன்களிலோ சோதிடத்திலோ சிறிதுகூட நம்பிக்கை கிடையாது. ஆனால் சுல்தானும், பெரிய பெரிய பிரபுக்களும் சோதிடத்திலே நீங்காத நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தினால், ஆந்த நம்பிக்கைக்குப் பாதகமான தம்முடைய கருத்தை அவர் வெளியிடுவதில்லை.

சுல்தானின் அமைச்சர், தம் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு, யாரேனும் உளவாளிகளை அடிக்கடி அனுப்பி வைக்கக்கூடும் என்ற சந்தேகம் வேறு இருந்தது.

அப்படி அனுப்பி வைக்கப்பட்ட உளவாளியாக உமார் இருக்கக்கூடும் என்றும் எண்ணினார். அப்படி எண்ணுவதற்கு ஆதாரம் இல்லாமலும் இல்லை. உமார் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லையென்று சொல்லியிருக்கிறான். இது