பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஆனால் யாஸ்மியின் கண்கள் பயத்தால் விரிந்தன. பல அதிசயமான விஷயங்களைத் தெரிவிக்கக்கூடிய விசேஷ அறிவு ஒன்று உமாரிடம் இருப்பதாக ஊரில் பேசிக் கொண்டார்களே, அது நினைவுக்கு வந்தது. இறந்து போனவர்களின் ஆவிகளோடு அவன் பேசுவது உண்டு போலிருக்கிறது என்பதை கலவரத்தோடு நிச்சயப் படுத்திக் கொண்டாள்.

“அந்தப் பேய்களோடு நீ எப்படிப் பேசுவாய்? எந்த மொழியில் பேசுவாய்?” என்று கேட்டாள் குழந்தைத் தனமாக.

“கண்ணுக்குத் தெரியாத வானதேவதையொன்று, இந்தக் கோபுரச் சுவரிலே இரவில் தினமும் வந்து உட்காருவது வழக்கம். ஆவிகள் பேசுகிற எல்லா விஷயங்களையும் அது தான் எனக்குச் சொல்லும், அதற்கு உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் தெரியும்!”

“சும்மா புளுகாதே! தேவதைகளைப் பற்றிப் புளுகுவது சரியல்ல! உண்மையில் பேய்கள் இங்கே வருமா? அதை மட்டும் எனக்குச் சொல்லு.”

தேவதையைப் பற்றி அவன் கூறியது புளுகென்று நினைத்த யாஸ்மிக்குப் பேய்களைப் பற்றிச் சொன்னது மட்டும். ஏதோ உண்மையாகத் தோன்றியது. இருளில் அரைகுரையாகத் தெரியும் கல்லறைகளின் பக்கம் சென்ற கண்ணைத் திருப்பவும் முடியாமல், பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாமல், ஓரக் கண்ணாலே பார்த்துக் கொண்டே, பயந்தபடி அவனை ஒட்டி உரசி உட்கார்ந்து கொண்டாள். உமார் தன் கைகளால் அவளை வளைத்து இறுக அனைத்துக் கொள்ளத் தொடங்கியபோது, பயந்து நடு நடுங்கி விடுவித்துக் கொள்ள முயன்றாள். உடலெல்லாம் வியர்த்தது. அவளுடைய நிலை தாழ்ந்தது. கண்கள் மூடிக் கொண்டன. பயத்தால் அவள் நெஞ்சு பட படவென்று துடித்துக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். அவள் உதடுகள் வேகமாகத் துடித்தன. “பயமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது” என்ற மெல்லிய ஒலி அவள் உதடுகளிலே பிறந்தது. அவனுக்கோ விரகதாபத்தால் ஏற்பட்ட உள்ளத் துடிப்பு, அவளுக்கோ கன்னி பயம், பயத் துடிப்பு முனு முணுக்கும் குரலிலே இருவரும் பேசிக் கொண்டார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அவனுடைய கைகள் அவள் உடலைத் தழுவியபடியே