பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

இப்போதிருக்கும் நிலையில் அப்பொழுது அந்த இரண்டு உருவங்களும் இருக்கவில்லை என்பதும் தெரிந்தது. ஆனால், எங்கே என்றுதான் நினைவில்லை.

உமார் அந்தக் கூனன் அருகிலே போய் உட்கார்ந்தான். அந்தக் கூனன் தண்ணீரைச் சுட்டிக் காண்பித்து, “கண்ணிர்க் கடலிலே மூழ்கிக்கிடக்கும் இந்த நிலாவைப் பார்த்தாயா அண்ணே!” என்று கேட்டான்.

அந்தக்குளத்தின் பரப்பிலே தோன்றிய பிறை நிலவின் உருவத்தை உமார் குனிந்து கவனித்தான். துன்பம் என்பது இந்த இரவிலே அவனுக்குப் பொருளற்ற ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் அந்தக் கூணன், துன்பப்படுவதை அவன் உணர்ந்தான்.

ஆதரவான குரலில் கூனனை நோக்கி, “நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான் உமார்.

“நான் காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். இதோ பார்; மற்றவர்களெல்லாம் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள். ஆனால், நான் அமிழ்ந்து போன அந்த நிலவுக்குக் காவலாக இருக்கிறேன். ஏனென்றால், அதுதான் உண்மையான நிலவு. ஆகாயத்திலே இருக்கும் அந்த நிலவு உண்மையானதல்ல; ஏனென்றால் அது மாறுவதில்லை; அழிவதுமில்லை இந்த இரவைப் போலவே எல்லா இரவுகளையும் நினைத்துக் கொண்டு, அது மறைவதும் தோன்றுவதுமாக இருக்கும்” என்று அந்தக் கூனன் விசித்திர விளக்கம் கொடுத்தான்.

உமார், “உண்மை, உண்மை” என்று ஒத்துதினான்.

தூங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரர்களைச் சுட்டிக் காட்டிய அந்தக் கூனன், “இதோ, இதோ, இவர்களுக்கெல்லாம் புதிய தலைவன் இருக்கிறான். ஆனால், எனக்கு யாருமில்லை. என்னுடைய தலைவரை நான் இழந்து விட்டேன். என் தலைவர் கருணைக் கதிரவன்; அதிர்ஷ்டமில்லாத அனாதைகளின் ஆதரவாளர்; அடிமையிலே மிகத் தாழ்ந்தவனான, அங்க ஹீனனான இந்த ஜபாரக்கை, அவர் அன்பாக நடத்தினார். கதிரவனின் உலகமான இதை விட்டுக் கதிரவன் பிரிந்து விட்டான்; நம்பிக்கையுள்ளவர்களை விட்டுப் பாதுகாப்பு விலகி விட்டது;