பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

உயர்நிலைப்பள்ளி நூலகம்

growth toward a realization of one's best self and greatest social efficiency and that School Library Service is essential in any programme of modern education directed toward the attainment of this aim, then the conclusion is apparent that the aim of school library service is the same as the aim of the school."

— SCHOOL LIBRARY SERVICE IN THE U. S.


பள்ளி நூலகம் என்பது பொதுக்கல்வியின் பின் சேர்க்கப் பட்ட ஒன்று அன்று. பொதுக்கல்வியின்கண்ணே விளங்கும் பல சிறப்பான கூறுகளுள் ஒன்று. பள்ளி நூலகத்தின் பணியின் செம்மையை ஒருவர் உணர வேண்டுமானல் அவர் பள்ளியிலே நூலகம் பெறும் பங்கு என்ன என்பதை அறிதல் வேண்டும். உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பாட நூல்களையே முழுதும் சார்ந்திராமல் பல நூல் படிக்கும் பண்பைப் பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்; அதனோடு விரிவாக எண்ணும் சிந்தனைச் செல்வத்தையும் பெறல் வேண்டும். அதற்குத் துணைபுரிய வல்லது பள்ளி நூலகமே. ஏனெனில் நூலகத்திலேயே பாடம் பற்றிய விரிவான நூல்களுடன் அன்று வெளியான விவரங்களுடன் கூடிய சிறந்த நூல்களும், அறிவிற் சிறந்த ஆசிரியர்கள் எழுதிய நூல்களும் கிடைக்கும். இளமைப்பருவம் அறிவுவேட்கை மிகுந்த பருவம். அந்த வேட்கை மிக்க பருவத்துக்கு மெத்த வளரும் கலைகள் பற்றிய புத்தம் புது நூல்கள் செறிந்த நூலகத்தாலேயே அறிவு விருந்தளிக்க முடியும். பாடநூல்களால் அவ்வாறு செய்தல் முடியாது.

"தற்காலத்தே உயர்நிலைப்பள்ளிக் கல்வியின் தரம் மிக மிகக் குறைந்துவிட்டது. அக்குறையை நிறைவாக்க வேண்டுமானால் மாணவர்களிடையே விரிந்த படிப்புணர்ச்சியையும் படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தல் வேண்டும். அதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்த நூலகம் ஏற்படுத்தல் வேண்