பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

உயர்நிலைப்பள்ளி நூலகம்

காற்றினும் அதிவிரைவில் வளர்ந்து செல்கின்றது என்று கூறலாம். பொதுநூலகங்கள் இல்லாப் பள்ளிகளில்தான் பாடநூலகங் கள் சிறக்க முடியும். அவை பெரும்பாலும் பணமின்மையின் காரணமாகவே தோன்றும். அதனால் அவை பலஆண்டுகளாகத் தோன்றிய நிலையிலேயே வளர்ச்சியற்றுக் காணப்படும். அதனல் பாடநூலகம் அமைக்கும்பொழுது வேண்டிய நிதியைச் சேர்த்து வைத்துக் கொளல் நலமாகும்.


பள்ளியிலேயே சிறந்த பொதுநூலகம் ஒன்று இயங்குமானல் பாட ஆசிரியர் தமக்கு வேண்டியவற்றை அதிலிருந்து தமது அறைக்கு எடுத்துச் செல்லலாம். இவ்வாறு எடுத்துச் செல்லும் பொழுது பிற பாட மாணவர்களால் பயன்படுத்தப்படும் நூல்கள் இருக்குமானல் அவற்றை அங்கேயே விட்டுச் செல்லவேண்டும். ஏனெனில் அவை பாட அறைக்குச் சென்றுவிட்டால் பிற மாணவர்கள் வேண்டும்பொழுது கிடைத்தல் அரிதாகும்.


இதுகாறும் கூறியவற்றல், பொதுநூலகத்தின் இன்றியமையாச் சிறப்பும் உதவியும் எளிதில் விளங்கும். அதனல் பள்ளியாளர்கள் பொதுநூலகத்தையே அமைக்க முயன்றிட வேண்டும். வேண்டுமானல் அதிகாரத்துக்குட்பட்ட வகுப்புநூலகத்தையும்; பாடநூலகத்தையும் ஏற்படுத்தலாம். இவை நாடோறும் தேவைப்படும் குறிப்புநூல்களையும், அகராதிகள், பாடநூல்கள், பாடத்திட்டங்கள் ஆகியவற்றையும் வேண்டுமானல் வைத்துக் கொள்ளலாம்.