பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. கட்டிடமும் இருக்கைகளும்


நூலகக் கட்டிடம்


நூலகம், அறிவியற் கூடம் போன்ற ஏனைய பகுதிகளைப் போன்றே இன்றியமையாத ஒரு பகுதி. என்வே, அதனை அதற்கு உரிய சிறப்போடு பள்ளிகளில் அமைத்தல் வேண்டும். அதனை அமைப்பதற்கு முன்னல் நூலகத்தின் நூல்களின் எண்ணிக்கை, நூல்தட்டுகளின் எண்ணிக்கை போன்றவற்றை நாம் கணக்கெடுத்து அதன் பின்னரே அதனைக் கட்ட முயலுதல் வேண்டும்.

நமது நாட்டிலுள்ள பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில் நூலகத்துக்கெனத் தனிக் கட்டிடங்கள் இல்லை. ஏதாயினும் ஒரு அறையில் நூலகம் அமைக்கப்பட்டிருக்கும். அதனால் அந்த நூலகம் என்றும் மார்க்கண்டேயனைப் போன்றே காணப்படும். நூலகம் நாடோறும் வளர வேண்டுமானல் அதற்கெனத் தனிக் கட்டிடம் கட்டப்பட வேண்டும். ஆனால், இன்றைய உயர்நிலைப் பள்ளிகளில் இரங்கத்தக்க நிலையில் இருப்பது நூலகம் ஒன்றே. அதற்கென நிலையான கட்டிடம் இல்லை. சில பள்ளிகளில் தாழ் வாரத்திலேயே நூலகம் இருக்கும்; சின்னுட் கழித்து வகுப்பு அறைக்குள் நுழையும்; சில நாள் சென்றபின் பொது மண்டபத் தில் திரையிட்டு அதனுட் புகும். இது தற்கால உயர்நிலைப்பள்ளி நூலகத்தின் அவல நிலை. இதற்குக் காரணம் பள்ளியாளர்கள் நூலகத்தின் சிறப்பினைத் தெரியாதிருத்தலே ஆகும். இனி, நூலகம் எப்படி அமைப்பது என்பதைப் பார்ப்போம்.

நூலகம் பள்ளிக்குள்ளே அமைக்கப்படல் வேண்டும். அவ்வாறு அமைக்கும்பொழுது நறுங்காற்றும் கதிரொளியும் தாராளமாக வீசும்படியாக அது கட்டப்படல் வேண்டும். பரந்த வெளியில் நூலகம் அமைத்தல் மேலும் மேலும் அது வளர்வதற்கு வாய்ப்பாக அமையும். பள்ளி அடைக்கப்பட்ட காலத்திலும்