பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

உயர்நிலைப்பள்ளி நூலகம்


நூலகத்திற்குச் செல்லத்தக்கவாறு அதன் வாயில் அமைக்கப் பட வேண்டும். இவ்வாறு அமைக்கப்பட்ட நூலகம் நீண்ட சதுர வடிவமாக இருத்தல் மிகவும் நல்லது. நூலகத்துக்கெனத் தனியானதொரு கட்டிட அமைப்பு உண்டு. டில்லியிலுள்ள கட்டிடக் கலைமன்றத்தினை அணுகினல் அது தக்க நூலக அமைப்பை வழங்கும்.

நூலகம் ஒரு பெரிய மண்டபத்தையும் சில அறைகளையும் கொண்டதாக இருத்தல் வேண்டும். பெரிய மண்டபமே நூல்கள் பொதிந்த இடமாகும். பெரிய மண்டபத்துடன் ஓர் அறையிருக்கும். அவ்வறையில் நூலகத் தலைவரும் அவர்தம் பணியாட்களும் இருப்பர். அங்கே நூல்களை வரவழைத்தல், வந்தவற்றைச் சரி பார்த்தல், பதிதல், குறித்தல், எண்ணிடல், சிதைந்த நூல்களை மீண்டும்தைத்து ஒழுங்குபடுத்தல் ஆகியன நடைபெறும்.

மூன்றாவது ஆராய்ச்சியரங்கு. இங்கு பத்து மாணவர்களும் ஓர் ஆசிரியரும் இருந்து நூலாராய்ச்சி பண்ணுவதற்கேற்ற வசதி இருக்கும். இது பொதுநூலகத்து மண்டபத்தில் நடைபெறல் நல்லதன்று. நான்காவது படிப்பகம். இங்கேதான் பல மாணவர்கள் நாடோறும் வருவர். காரணம் அன்றாடச் செய்திகளை அள்ளிவரும் நாளிதழ்கள்முதல், வார, மாத, கால, துண்டு இதழ்கள் வரை எல்லாம் இங்கு இருக்கும். ஐந்தாவதாக ஓர் அறையுண்டு. இது காப்பறையாகும். இங்கு அரிதாகப் பயன்படும் நூல்கள் வைக்கப்பட்டிருக்கும். இதனுள் பிறர் செல்லல் இல்லை.

நூலகத்துக்கெனத் தனிக் கட்டிடமமைக்க விரும்பாத பள்ளியாளர்கள் இத்துணை அறைகளை உடனடியாய் அமைத்தல் அருமையே. அதனால் நூலக மண்டபம், நூலகத்தலைவர் அறை, ஆகிய இரண்டையாவது அமைத்திட வேண்டும்.

உயர்நிலைப்பள்ளிக் கல்விக்குமு உயர்நிலைப்பள்ளிகளில் குறைந்த அளவு 500 மாணவர்களையும் நிறைந்த அளவு 750 மாணவர்களையும் சேர்க்கலாமென்று தனது அறிக்கையிற் கூறி