பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக நிதி

21


மாணவர்கள் படிப்பார்கள்; வடமொழியை ஒரு மாணவன் படிப்பான்; என்று வைத்துக்கொண்டால், தமிழ் நூல்களையே அதிகம் வாங்கி வைக்க வேண்டும். பாடநூல்களை வாங்கும் பொழுது பாடமெடுக்கும் ஆசிரியர்களைக் கலந்துகொண்டு வாங்கவேண்டும். அஃதோடு பாடம் படிக்கும் பல வகுப்பு மாணவர்களையும் கலந்துகொண்டு, அவர்கள் அறிவுக்கேற்ற நூல்களையும் வாங்கவேண்டியது நூலகத்தலவரின் கடமையாகும்.

நூலக மானியத் தினைக் கீழ்வருமாறு பங்கிட்டுச்செலவழித்தல் சிறப்பாகும்.

விழுக்காடு

1. நூல்கள் 40

2. பருவமலர்கள் 5

3. நூலகத்தார் ஊதியம் 40

4. ஒளியமைப்பு முத்லியன 5

5. நூல் பழுதுபார்த்தல் 8

6. கைச்செலவு 2

100

சில பள்ளிகளில், நூலகத்தார் ஊதியமும், ஒளியமைப்பு முதலியனவும் பள்ளியாளர்களே பள்ளிப் பணத்தில் அமைப்பின் நூலக மானியம் ஓரளவு குறையும்.

நூல்களைப் பழுது பார்த்தல் பத்து ஆண்டுக்கு ஒரு முறையே நடைபெறும். உள்ளுரில் சிறந்த பொது நூலகம் ஒன்று