பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பள்ளிநூலகத் தலைவர்

31


4. நூலகத் தின் பயன்


1.பாடம் நடத்துவதற்கு நூலகம் பயன்படுமுறை.

2.வேண்டிய நூல்களை விரைவாகவும் எளிதாகவும் நூலகத்திற்குச் சென்று தாமே எடுக்க மாணவர்களைப் பழக்கல்.

3.படித்த நூல்களின் சிறப்புச் செய்திகளை விளங்கிக் கொள்ளுதல், அவற்றைக் குறிப்பெடுத்தல், காத்தல், காத்தவற்றினைப் பிறர்க்கு வெளிப்படுத்தல்.

இதுகாறும் கூறிய முறைகளை மாணவர்கள் அறிந்துகொள்ளுமாறு நடைமுறை மூலம் கற்பிக்க வேண்டும். அவ்வாறு கற்பித்தற்கு வேண்டிய வசதிகளை உண்டாக்கியும் தரல்வேண்டும்.


4. தரங்கள்


பள்ளிநூலகத் தலைவர் பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்குக் கீழ்க்கண்டவற்றில் பயிற்சி அளித்தல் வேண்டும்.

1.பள்ளி நூலகத்துக்கு வேண்டிய நூல்களைப் பொறுக்குதல்.

2.ஐயாயிரம் நூல்களைக்கொண்ட ஒரு நூலகத்தை அமைத்தல், ஆக்கல், நடத்தல் என்பன.

3.பள்ளிப்பாடத்துக்கு நூலகம் பயன்படும் விதத்தைப் புரிதல், ஆசிரியர்க்கு வேண்டுவனவற்றை உதவல்,