பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

உயர்நிலைப்பள்ளி நூலகம்


அதுமட்டுமன்று; கல்வித்துறை வல்லுநராகவும், சிறந்த உளநூற் பேராசிரியராகவும் ஒளிரவேண்டும்; அதனோடு சிறந்த நூலகத்தை அமைப்பதிலும், நடத்துவதிலும் வல்லவராகவும் விளங்க வேண்டும். முடிவாக அவர் நூல்வேட்கையும், அறிவுவேட்கையும், பிள்ளைகளைப் படிப்பிப்பதில் விருப்பமும் உடையவராக இருத்தல் இன்றியமையாததாகும்.

நூலகத் தலைவர், கல்வித்துறை, நூலக நுணுக்கம், நூலக ஆட்சி ஆகியவற்றிலே திறமை மிக்கவராக விளங்கவேண்டும்.


கல்வித் துறை


மாணவர்க்கு நூலகத்தின் மேல் வேட்கையும், நூலகத்தை நன்கு பயன்படுத்தும் ஆர்வமும் உண்டாக்கல், ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தை ஒதுக்கி அக்காலை வரும் மாணவர்க்கு நூல் எடுத்தல், படித்தல், ஆராய்தல் ஆகிய வற்றிலே பேருதவி புரிதல், மாணவரோடும், ஆசிரியரோடும் அறிவுத் தொடர்பும் ஆன்மநேய ஒருமைப்பாடும், கூட்டுறவும் கொள்ளல், ஆகியவை நூலகத்தலைவரின் முக்கிய பணிகளாகும்.


நூலக நுணுக்கம்


நூல்களையும், பருவ மலர்களையும் பொறுக்கல், வாங்குதல், தொகுத்தல், வகுத்தல், கொடுத்தல், நூல் அட்டவணை தயாரித்தல், மாணவர்கள் நூல்களைப் பலவாறு பயன்படுத்தச் செய்தல் ஆகியவற்றிலே நூலகத்தலைவர் திறம்பெறல்வேண்டும்.


ஆட்சி


ஆட்சி என்றால் நூலகத்தை அமைத்து நடத்துதல் என்று பொருள். ஆண்டு வரவு செலவுத் திட்டம், ஆண்டறிக்கை