பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

உயர்நிலைப்பள்ளி நூலகம்


ஒரே நூலில் பத்து அல்லது பதினைந்து வாங்குமாறு குறித்து அனுப்புவது; தங்கட்கு ஒதுக்கப்பட்ட பணத்தினையும் அறியாது நூல்களைக் குறித்தனுப்புவது ஆகியவை நடைபெறும். நூலகத்தலைவர் முறைப்படி அவற்றிலே தள்ளவேண்டியவற்றைத் தள்ளி, கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளும்பொழுது அவர் மேலே ஆசிரியர்கள் வீணேசீறிவிழுவர்.

பொதுவாக எல்லோரும் படித்தற்குரிய நூல்களை நூலகத் தலைவரே விலைப்பட்டியலைப் பார்த்து வாங்குவார். அவ்வாறு வாங்கும்பொழுது மாணவர்தம் பலவிதமான சுவைக்கேற்றவாறு வாங்கல்வேண்டும்.

நூலகத்துக்கு மானியம் ஒதுக்கப்படும் பொழுது, அது மேற்குறித்த எல்லாப் பாடங்களுக்கும் சரியாகப் பிரித்துப் பங்கிடப்படும். மேலும் ஒதுக்கப்பட்ட பணம் குறிப்பிட்ட ஆண்டுக்குள்ளேயே செலவிடப்படுவது வழக்கமாகும். நூலகத் தலைவர் நூல் வாங்கும்பொழுது நூலின் தரத்தை மட்டுமின்றி நூலின் அமைப்புத் திறத்தையும் கவனித்து வாங்கல் வேண்டும்.

நமது நாட்டில் பதிப்பகங்களும், வெளியீடுகளும் இன்னும் சீரடையவில்லை. அச்சுக்கலை இன்னும் தளர்கடைப் பருவத்திலேயே உள்ளது. சில சிறந்த பதிப்பக முதலாளிகளும், வெளியீட்டாளர்களும் சிறந்த நூல்களேச் சிறந்த முறையில், தாய் மொழிகளிலே வெளியிடமுயன்று வருகின்றனர். மாநில அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் பள்ளிப் பிள்ளை முதல் பருவங்கடந்த பெரியோர் வரை படிக்கத் தக்க நூல்களை ஆயிரக்கணக்கில் விரைவாக வெளிவரச்செய்யுமாறு எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையும் தூண்டுதல் வேண்டும்.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் சிறந்த நூலட்டவணைகள் அந்த நாட்டுப் பிள்ளைகளுக்கே என்ருலும் அது நமது நாட்டுக்கும்