பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

55


யும் கொடிகளையும் பிற ஓரறிவுயிர்களையும் பற்றி எழுதியிருப்பர். இன்னும் சிலர் நற்றிணயில் வரும் மொழியியற் கூறுகளை ஆராய்ந்து எழுதியிருப்பர். நூலகத்துக்கு வந்துள்ளது நற்றிணை பற்றிய நூல். மொழியியல் நூலாயின் அதற்குரிய எண்ணை நோக்கல்வேண்டும். அதற்குரிய எண் 08 என்று இருக்குமானல், நற்றிணையின் மொழி என்ற நூலின் வகுப்பு எண் 9.8 என்பதாகும். ஆனால், ஒன்றை நினைவிற்கொள்ளவேண்டும். செடி கொடிகளைப்பற்றிய ஆராய்ச்சி நூலையும், அவற்றைப் பற்றிப் பாடிய நூலையும், ஒன்ருகக் குழப்பக்கூடாது. பொருள் ஒன்றே என்ருலும், முன்னதின் போக்கு வேறு, பின்னதின் போக்கு வேறு.

2. குறிப்பிட்ட எண்ணில் நூலைச் சேர்த்தல் மிகவும் முக்கியமானதாகும். இந்து மதத்தின் அடிப்படை என்ற நூல் வந்துள்ளது. அதனைச் சேர்க்கவேண்டும். என் செய்வது ? இந்த நூல் மதம் பற்றியது. அதனல் மதம் என்பதற்குரிய 200 என்ற எண்ணில் சேர்த்தல் தவறு. ஏனெனில் 200 என்பது எல்லா மத நூல்களுக்கும் பொது எண்ணுகும். இந்து மதம் பல மதங்களுள் ஒன்று. அதனல் இந்த நூலுக்கு எனத்தனி எண் தரப்படல்வேண்டும். கிறித்துவ மதம் தவிரப் பிறமதங்களுக்கு என்று 290 என்னும் எண் உளது. அதனல் இந்த நூலை 290 என்பதிற் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மட்டும் போதாது. அவ்வாறு செய்வது சுவைமிக்க மாம்பழத்தை நுகர்ந்து பார்த்து அப்படியே வைத்து விட்டது போன்றதாகும். எனவே, பிற மதங்கட்குரிய 290 என்பதைத் தந்தபின், அங்கே ஒவ்வொரு மதங்கட்கும் தனியான எண்கள் கொடுக்கப் பட்டிருப்பட்டிருப்பதைப் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்ப்பின் இந்து மதத்துக்கு 294.5 என்ற எண் தரப்பட்டிருக்கும். எனவே, இந்துமத நூலின் எண் 294.5 என்பதாகும்.