பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

உயர்நிலைப்பள்ளி நூலகம்


சிலசமயம் இத்தகைய எண்கள் மிகவும் நீண்டுபோய்விடும். நீண்டு போய்விட்டதாக எண்ணி வேருேர் எண் தரல்கூடாது. எண் எவ்வளவுதான் நீண்டாலும் அதனையே தரல்வேண்டும். ஏனெனில் இங்கு பார்க்கவேண்டியது தெளிவே தவிர உழைப்பன்று. சிலர் சோம்பலின் காரணமாக எண்களைச் சுருக்க வேண்டும் என்று கூறுவர்; அது சரியன்று; நூலகம் நாள் தோறும் வளரும் ஒன்று. வளர்ச்சிக்கேற்ப, எண்களும் வளர்ந்து பெருகுதல் வேண்டும். இல்லையேல் நூலகம் வளராமல் தளர்ந்து தண்டூன்றிச் செல்லும் கிழவன் தன்மையை அடைந்துவிடும்.

3. ஒரே நூல் இரண்டு பொருளைப் பற்றிப் பேசுமாளுல் அவற்றில் எது முக்கியமாகக் கருதப்படுமோ அதன்கீழ் நூலைச் சேர்த்தல் வேண்டும். அல்லது இரண்டு பொருளும் ஒரே தன்மையானவையாக இருப்பின் முதற்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டாவதைக் குறிப்பிட்டாற் போதும். எடுத்துக்காட்டாக ஒரு நூல் மொழியியலையும் மொழி வரலாற்றையும் பற்றியதாக இருந்து அவற்றில் மொழியியல் முக்கியமானதாக இருக்குமானல் அதனை மொழியியலிற் சேர்த்து, மொழி வரலாற்றிற் குறிப்பிட்டாற் போதும்.

4. ஒரு நூல் தொடர்புடைய மூன்றைப் பற்றியதாக இருக்குமானல், எது அதிகமாகப் பேசப்படுகிறதோ அதிற் சேர்க்கலாம். அல்லது இவற்றையெலாம் அடக்கிய ஒரு வகுப்பிற் சேர்க்கலாம். வெப்பம், ஒளி, ஒலி ஆகிய மூன்றைப் பற்றிய நூலாக இருக்குமாயின் அதனைப் பொறிநூற் பகுதியிற் சேர்க்கலாம். அல்லது அந்த நூலில் ஒளி மிகுதியாகப் பேசப்பட்டிருக்குமானல் ஒளிப்பகுதியில் அதனைச் சேர்க்கலாம்,