பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

67


வரிசை ( Series) என்பது வரிசையின் பெயர், நூல் சேர்ந்த வரிசை, வரிசையின் எண் ஆகியன கொண்டதாகும்.

THE TAMIL CULTURE. A. Series Of Tamil

Literature Readers For Foriegn Scholars. Vol. I., No. II.

நூலின் தலைப்பு விளக்கமாக இல்லையானல், பொருள் அடக்கம் தந்துவிடலாம். பிற்சேர்க்கைகள் அட்டையின் பின்புறம் குறிக்கப்படும்.

அட்டவணை அட்டையின் நீளம் 12.5 Cm; உயரம் 7.5 Cm. அடிப்புறத்தில் ஒட்டையிட்டு ஒரு நீளக் கம்பியில் எல்லா அட்டைகளும் கோக்கப்படும். அட்டவணைப் பெட்டியில் (Cabinet) வேண்டிய அட்டைகளை வைப்பதற்கு ஏற்றதாக அறைகளை அமைத்தல் வேண்டும். ஏறத்தாழ 400 அட்டைகளைக் கொள்ளக்கூடியதாக ஒவ்வொரு அறையும் இருத்தல்லம். கோடிட்ட அட்டைகளையும் கோடில்லா அட்டைகளையும் பயன் படுத்தலாம். முன்னவை கையெழுத்துக்கும் பின்னவை தட்டெழுத்துக்கும் பயன்படுத்தப்படும்.

சிறிய நூலகமாயிருப்பின் அட்டவணை அட்டைகளில் தேவையான விவரங்களை மாத்திரம் குறித்தால் போதும். நூல் வெளியான நாள், பதிப்பாளர் முதலியவற்றை நீக்கிவிடலாம். அட்டைகள் பதியப்பட்டபின், அவற்றை அறையில் அடுக்க வேண்டும். அதற்கு இரண்டு முறைகள் உண்டு. ஒன்று அகர வரிசை; மற்றென்று எண் முறை. அகர வரிசையில் ஆசிரியரின் பெயர், நூலின் தலைப்பு இவற்றின் அகர வரிசைக்கேற்ப அட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும். எண் வரிசையில் நூலின் குறிப்பெண்ணிற்கு ஏற்ப அட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும்.